Sunday, October 3, 2010

அவளுக்கும் அழகென்று பேர்

அவள் சிரித்தாள் அழகு காட்ட
அவள் சிணுங்கினாள் அழகு காட்ட
அவள் தலை கோதினாள் அழகு காட்ட
அவள் உதடு சுழித்தாள் அழகுகாட்ட
அவள் தலையைத் தட்டினாள் அழகுகாட்ட
அவள் தாவணி சரிசெய்தாள் அழகுகாட்ட
அவள் ‘போடா’ என்றாள் அழகுகாட்ட
அவள் நகம் கடித்தாள்
நாசூக்காய் கோபித்தாள்
பாடல் ரசித்தாள்
பல்லவி பாடினாள்
பள்ளிக்கதை சொன்னாள்
பாதிக்கதை நிறுத்தினாள்
அழகுகாட்ட....

அயர்ந்து தூங்கினாள்
தானாய்க் கூடியது அழகு....

13 comments:

  1. ஓகே.வயசு அப்படி எழுதுறீங்க. இன்னும் கூட மாத்தி யோசிக்கலாமோ?

    ReplyDelete
  2. ம்ம்...சொல்லவேயில்லை.என்ன விஷேசம்ன்னு கேட்டதுக்கும் இல்லன்னு சொல்லிட்டு இப்பிடி ஒரு கவிதை.நம்பமுடில உங்களை !

    ReplyDelete
  3. Beautiful indeed. Photovum pottirukkalam. :-)

    ReplyDelete
  4. யோவ் ஏன்னய்யா ஆச்சு..காலையிலியே யாகம் ஆரம்பிச்சிட்டாரோ! ? ;)))

    ReplyDelete
  5. @கே.ரவிஷங்கர்

    நன்றி சார் கருத்துக்கு...கொஞ்சம் கோடுகாட்டினாப் புரியும் எப்படி மாத்துறதுன்னு.. நான் தோணியதும் எழுதிவிட்டேன்.

    @ஹேமா...
    கவிதைக்குப் பொய் அழகு... :-)

    ReplyDelete
  6. @கார்த்தி...
    ஃபோட்டோ இருந்தா போடமாட்டேனா? :-(
    நன்றி...

    @கோபிநாத்...
    மாப்பி...கககபோ...

    ReplyDelete
  7. ரசித்தேன், நல்ல கவிதை. ஆனால் கீழே கொடுத்த தலைப்பில் 'மொக்கை' என்பதை தயவு செய்து எடுத்து விடுங்கள். என்னவோ போல் உள்ளது
    (என்பது என் கருத்து, மன்னிக்கவும்)

    ReplyDelete
  8. அவன் நினைத்தான் சரக்குபோட
    அவன் கிளம்பினான் சரக்குபோட
    அவன் டாஸ்மாக்கினான் சரக்குபோட
    அவன் டேபிள்தேடினான் சரக்குபோட
    அவன் அமர்ந்தான் சரக்குபோட
    அவன் கூப்பிட்டான் சரக்குபோட
    அவன் ஆர்டரினான் சரக்குபோட
    அவன் சிக்கன்சொன்னான் சரக்குபோட
    அவன் காத்தான்
    அவன் வேர்த்தான்
    அவன் தேடினான்
    அவன் தவித்தான்
    வந்ததும் அவன் பாட்டிலின் மூடி திறந்தான்
    அவன் குலுக்கி பாட்டிலை மூடித் திறந்தான்
    சரக்குபோட

    க்ளாஸில் ஊற்றினான்
    தானாய்ப் பொங்கியது நுரை..

    ;)))

    Dedicated to Vaalji...!!! :)

    ReplyDelete
  9. @சே.குமார்...
    நன்றி நண்பரே...சில நொடி அப்படியும், சில நொடி இப்படியுமாகத்தான் ஊசலாட்டத்தில் வாழ்க்கை... :-)

    @வேல்கண்ணன்...
    நன்றி வாழ்த்துக்கு, ‘மொக்கை’யாகப் படுபவர்களுக்கு உதவும் லேபிள். :-)

    ReplyDelete
  10. @தர்ஷினி...
    நன்றி தர்ஷினி ரசிப்புக்கு...

    @கோசி...
    நன்றிடா...

    @இரா.வசந்தகுமார்...
    இதுக்குக் கூட எதிர் கவிதையா??!!!
    நல்ல ரசனை:-)
    வால் இப்பக் குடிக்கிறதை நிறுத்திட்டாரு தெரியுமா????

    நன்றி வசந்த்...

    ReplyDelete