மூன்று வருடங்களுக்கு முன் கிறுக்க ஆரம்பித்தேன் வலைப்பூவில். அந்தா இந்தாவென இப்போது 100வது பதிவு வந்துவிட்டது.பதிவெழுதுறேன் பேர்வழின்னு முன்னெல்லாம் யோசிக்காமக் கிறுக்குவேன். இப்ப கொஞ்சம் யோசிச்சுக் கிறுக்குறேன். எண்ணிக்கை முக்கியமில்லையெனினும், இவ்வலைப்பதிவு எனது பயிற்சிகளை,முயற்சிகளைப் பதிந்துவைக்க ஒரு நல்ல இடமாக இருப்பதால் எண்ணுவது கொஞ்சம் அவசியமாக இருக்கிறது.
உங்க மனசுக்குப் பிடிக்குதோ, இல்லையோ, ஃபேசுபுக், டுவிட்டர், பஸ்களின் அணிவகுப்புகளில் பதிவுலகம் சோரம் போச்சோ இல்லையோ, இன்னமும் என் மனசுக்குப் பிடிச்சதா இருக்கு பதிவு போடுறது:)
ஒரு சின்ன மகிழ்ச்சியோட, இதுவரைக்கும், வாழ்த்தியும்,ரசித்தும் வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை பென்சில் ஜாம்மர்ஸின் இலக்கு, பெங்களூர் MG சாலையை அடுத்துள்ள கமர்ஷியல் ஸ்ட்ரீட். பத்துமணிக்குமேல் பரபரப்பாக இருக்குமென்பதால், வெள்ளனவே அங்க போய்ட்டோம். இந்தவாரம் நான் தான் ஃபர்ஸ்ட்.8.30க்கெல்லாம் அங்க இருந்தேன். முதலில் ஒரு கட்டிடம், மாருதி ஸாரி உத்யோக் லிமிட்டெட். நான் வரைய ஆரம்பிக்கிறப்போ பூட்டியிருந்தது. ஷட்டர்கிட்ட நான் வர்றப்போ, கடையைத் தொறந்திட்டாங்க. கட்டிட்ங்கள் வரைவதில் இருக்கும் பெர்ஸ்பெக்டிவ் சவால் வேறெதிலும் கிடையாது. பால்பாயிண்ட் பென்னில் வரைந்து பழகுவதால் கொஞ்சம் கவனத்தோடுதான் ஆரம்பித்தேன். மூன்று இடங்களில் படிக்கட்டுகள்.ஓவரா இம்சையைக் கூட்டிருச்சு.ஒருவழியா பத்தரைக்கிட்ட முடிச்சிட்டேன்.(90 சதவீதம்). மீதி வீட்டில் வந்து ஃபைனல் டச்சப் கொடுத்தேன்.
கன்னட எழுத்துக்களை அங்கேயே எழுதியிருக்கலாம், விட்டுவிட்டேன். அதான் ஜிலேபியாப் பிச்சுப் போட்டிருப்பேன்....
அடுத்து இன்னும் கொஞ்சம் முன்னேறி, வீதிக்குள்ளாக நுழைந்துவிட்டோம். எல்லோருக்கும், பழைய , சற்று இடிபாடுள்ள கட்டிடங்கள்தான் இலக்கு. நான் மட்டுமா அதில் விதிவிலக்கு? அப்படிக் கிடைத்ததுதான் இந்த ஹேண்ட்லூம் செண்டர்.இந்நேரத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கடைகளும் திறந்துவிட்டிருந்தன.அகலம் குறைந்த கடைகளின் முன்னே, வாயிலையும் முழுதும் அடைக்காமல், அவர்கள் வியாபாரமும் பாதிக்கப்படாமல் எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். அமர்ந்தும், நின்றும் வரைந்ததில் ‘பெர்ஸ்பெக்டிவ்’ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓகே ரகம்தான்.கொஞ்சம் ஹோம் ஒர்க் தேவை...
நூறாவது பதிவுக்கு, புது டெம்ப்ளேட் போடலாம்னு இருந்தேன். ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கு. மெதுவாப் பார்த்துக்கலாம்.(எல்லோரும் பஸ்ஸிலதான் வந்து ஏறுறாங்க...:) )
டிஸ்கி 1: எப்பவும் அரைகுறையா மொபைல்லதான் படம் எடுத்துப் போடுவேன். ஸ்பெஷல் பதிவுன்றதால, மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணிப் போட்டேன். ஒரு நல்ல , சீப்பான ஸ்கேன்னர் தேடிட்ட்ட்ட்ட்ட்டேஏ இருக்கேன். ஆப்புட மாட்டேங்க்யுது. எப்சன்ல ஒண்ணு சொல்றான். ஆத்தி நாலாயிர்ரூவா ஆகுது.பாப்போம்.
டிஸ்கி 2: புது அறைக்கு தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.(பேச்சிலர் தனியா வீடு எடுத்துப் போறதுதான உண்மையிலேயே தனிக்குடித்தனம். ம்ஹ்ம். இது தெரியாம தப்பாப் பேசிட்டு திரியுறாய்ங்க.) வீடு ஓரளவு வசதியாக உள்ளது. இனிமேல் வாட்டர் கலர் முயற்சிகள் அடிக்கடி வருமென நம்புகிறேன். எல்லோர்கிட்டயும் ஓப்பனா சொல்லிட்டா, அதுக்காகவாவது பண்ணுவேன்னு ஒரு ஆசைதான்....
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ,
ReplyDeleteதொடர்ந்தும் நிறையப் பதிவுகளை நீங்கள் பகிர வேண்டும்,
நூறாவது பதிவோடு நீங்கள் பகிர்ந்துள்ள ஓவியமும் அசத்தல்.
மாப்பி 100வது பதிவுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteபுது வீடுக்கு இன்னொரு வாழ்த்து ;))
சீக்கிரம் யாகம் நடத்திடுவோம் ;)
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவாழ்த்துக்கள்!! மிக அழகு
ReplyDeleteநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநூறுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள் தத்ரூபமாக வந்துள்ளன.
வாழ்த்துகள் நண்பா.
ReplyDeleteஓவியம் நல்லாருக்கு. தொடர்ந்து பகிருங்கள்.
@நிரூபன்...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
@கோபிநாத்...
நன்றி மாப்பி... நடத்திடுவோம்...:)
@சந்ரு...
ReplyDeleteமிக்க நன்றி தோழரே வாழ்த்துக்கு...!
@மாணவன்...
உங்க பேரு மாணவனா இருக்கலாம். அதுக்காக என்னை ‘சார்’ நெலாம் கூப்பிடவேணாம்... :)
நன்றி நண்பரே...!
@நடராஜன்...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
@சே.குமார்...
வாழ்த்துக்கு நன்றி குமார்...!
@ராமலஷ்மி...
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி மேடம்...!
@செ.சரவணக்குமார்...
நன்றி சரவணன், நீங்களும் இப்போதுதான் 100 தொட்டீர்கள். நானும் :)
பரணி அண்ணா.....வாழ்த்துகள் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்க பென்சிலுக்கும் !
ReplyDelete"நூறாவது பதிவு" வாழ்த்துக்கள்.
ReplyDelete@ஹேமா,,,
ReplyDeleteநன்றி ஹேமா...
@மாதேவி....
நன்றி மாதேவி...