Tuesday, April 14, 2009

யுவனின் ‘வாமன’ அவதாரம்-இசை விமர்சனம்

           ’குங்குமப்பூவும்,கொஞ்சும்புறாவும்’,’சர்வம்’ படங்களுக்குப் பின் யுவனின் புதிய ஆல்பம் ‘வாமனன்’.புது இயக்குனரின் படம். தொழில்நுட்பக் கூட்டணியை அப்படியே செல்வராகவனிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறார். இசை-யுவன்,பாடல்கள்-நா.முத்துக்குமார்,ஒளிப்பதிவு-அரவிந்த் கிருஷ்ணா.

          யுவனிடமிருந்து ஓரளவு வேலை வாங்கியிருக்கிறார் என்றே கூறலாம். ஐந்து பாடல்கள். ஐந்தில் மூன்று தேறுகிறது.மீதி இரண்டு ஆல்பத்தில் மட்டுமே சேருகிறது. காதில் கூட ஏறவில்லை.இசைச் சேர்ப்பும், கோர்ப்பும் கச்சிதம்.

        ‘ஒரு தேவதை பார்க்கும் நேரமிது’. கஸல் பாடல் கேட்பது போன்ற உணர்வினைத் தோற்றுவிக்கிறது. ’வெண்மதி வெண்மதியே நில்லு’ புகழ் ரூப்குமார் ரத்தொட் பாடி இருக்கிறார்.அமைதியான, மனதை வருடும் மயிலிறகு இசை.சிற்சில இடங்களில் ‘நினைத்து,நினைத்துப் பார்த்தேனை’ நினைத்துப் பார்க்க வைக்கிறது.

         ‘ஏதோ செய்கிறாய்’ -ஏதோ கேட்க வைக்கிறது.உள்ளே ஏதும் செய்யவில்லை.வித்யாசாகரின் இரண்டாம் தர மெலடி போல் உள்ளது.  ஜாவித் அலி தமிழைச் சாப்பிட்டு விட்டார்.பெண்பாடகி சௌம்யா ராவ் பரவாயில்லை.
தொடர் கேட்புகளில் பிடித்துப்போகலாம்.

          ’யாரைக் கேட்பது’-விஜய் ஏசுதாஸின் பாடலில் சோக நெடி அதிகம். ஆனாலும் ரசிக்க வைக்கிறது. படமாக்கலைப் பொறுத்து பாடல் வெற்றியடையலாம்.வரிகள் நாமே எழுதியது போல் மிகச்சாதாரணம்.(பாடல்கள்: நா. முத்துக்குமார்..?!)

        ‘லக்கிஸ்டார்’(பிளேஸ்,சுவி)- சினிமா ஹீரோ கனவில் இளைஞன் பாடுவது..வேறென்ன சொல்ல..?(’ஏலே எங்க வந்த-மாயக்கண்ணாடி டைப்பில்.)
இந்த சூழலுக்கு அன்றும், இன்றும் பெஸ்ட், ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ தான்..

       இன்னொரு பாட்டு ‘மணி மணி’- பெண் பாடகியின் குரலில் ஏக்கம் அதிகம்(...:-))யுவன் வாங்குன ‘மணி’யை விட அதிகமா, சும்மா போட்டுக் கொடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்.

      ‘சர்வம்’ பாடல்களோடு ஒப்பிடுகையில் ‘வாமனன்’  உருவத்தில் மட்டுமல்ல...  தரத்திலும்தான்..

8 comments:

  1. யுவனோட சாங்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..இந்த படமும் நிச்சயம் பிடிக்கும் என் நம்புகிறேன்.பகிர்வுக்கு நன்றி தமிழ்பறவை. :)

    ReplyDelete
  2. app kadasiya enna solluringa...


    CD வாங்கலாமா ??? வேண்டாமா ????

    ReplyDelete
  3. இசை விமர்சனம் நன்றாக இருக்கிறது... நான் ஹிட் ஆனால் மட்டுமே இப்பாடல்களைக் கேட்பேன்!!! நமக்கு அந்தளவுக்குத்தான் நேரம்!!

    ReplyDelete
  4. முந்திக்கிட்டிங்களே சகா.. நானும் எழுதலாம்னு இருந்தேன்.. சரிவம்ம விட பெட்டர் தான்.. ஆனாலும் யுவனின் கிராஃப் மீண்டும் டவுன் ஆவது போல் தெரிகிரது

    ReplyDelete
  5. @தர்ஷினி: கண்டிப்பாகப் பிடிக்கும் தர்ஷினி மூன்று மெலோடிகளும்.

    @மேய்வீ: CD வாங்கலாம். ஆர்கெஸ்ட்ரைசேஷன் நன்றாக உள்ளது மேய்வீ.

    @ஆதவா: வாங்க ஆதவா சார்.படம் ஹிட்டானால் பாடல் ஹிட்டாகலாம்.எனினும் ‘ஒரு தேவதை’ பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

    @கார்க்கி: வாங்க சகா.. உங்களை முன்னுதாரணமா வச்சுதான் விமர்சனமே போட்டேன்.’கு.பூ.கொ.பு’,’சர்வம்’ படங்களில் ஏறிய யுவனின் கிராஃப் சற்றே இறக்கம் கண்டுள்ளது அவ்வளவுதான்.என்னைப் பொறுத்தவரை ‘சர்வம்’ அல்டிமேட்.

    ReplyDelete
  6. நல்ல பாட்டாயிருந்தா நானும் CD ல தரையிறக்கிப் பதிவு செய்துகொள்கிறேன்.நன்றி அண்ணா.

    ReplyDelete
  7. வாங்க குடுகுடுப்பையாரே... கேட்டுட்டுச் சொல்லுங்க...

    வாங்க ஹேமா...
    பாடல்கள் கேட்டுட்டுச் சொல்லுங்க...

    ReplyDelete