ஜெர்மனி வந்த நாள்ள இருந்து இந்த நாள் வரை கடுமையான ஜலதோஷம், கூடவே காதல் போலக் காய்ச்சலும் ..(உள்ள இருந்து படுத்தி எடுக்குது, வெளிய யாருக்கும் தெரியலை).ஆபீஸ், ஹோட்டல் ரூம், ட்ரைன் மற்றும் ஷாப்பிங் மால் தவிர எல்லா இடத்துலயும் குளிர் கொல்லுது. வந்து இறங்கினப்போ பத்து டிகிரி இருந்தது. போகப் போக தேமுதிக செல்வாக்கு மாதிரி குறைஞ்ச கிட்டே இருக்குது.
muukku சிந்திச் சிந்தி அது காணாமப் போகாததுதான் மிச்சம்,,,(அது போகாது, இன்னும் ஏகப்பட்ட பேர்கிட்ட நோஸ்கட்வாங்க வேண்டி இருக்குதே..;) )
நேத்து புல்லா தூங்கியே கழிச்சாச்சு...இன்னைக்குக் காலையில சீக்கிரம் பத்து மணிக்கெல்லாம் எழுந்து இந்த இடத்துக்குத்தான் போனோம்.இது முனிசிபாலிட்டி பிள்டிங்க்காம் , ரெண்டாவது உலகப் போர் அப்ப , மேயர்கள் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இங்கதாn ரகசிய மீட்டிங் போட்டாங்களாம். அப்புறம் இங்கு குண்டு போட்டாங்களாம். அதுக்கப்புறம் புதுசா நிர்மாணம் செய்தார்களாம்...என் நண்பன் சொல்லக் கேள்வி. அங்கு எல்லாமே ஜெர்மன் மொழியிலையே எழுதி இருக்காங்க...அட்லீஸ்ட் மதுரைத் தமிழ்ல கூட எழுதி வைக்கலை. விக்கிப்பீடியாவில பார்த்தாலும் ஜெர்மன் தான்...:(
இந்த இடத்தைத் தாண்டிப் போனால் 'ரெயின்நதி வருகிறது....
இந்தக் கட்டிடத்திற்கு நான் போன நேரம் பதினோரு மணி இருக்கும். வரைய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் என் அருகில் ஒரு ஜென்டில் மேன் வந்தார் தொப்பியுடன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொப்பியைக் கீழே வைத்துவிட்டு முழங்கால் போட்டு அமர்ந்தார்....ஒ ஒ... நம்ம ஒர்க்குக்கு 'HATS OFF' சொல்கிறாரோ சிம்பாலிக்காக என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது, அவர் பிசினசிற்காக கல்லாவைத் திறந்திருக்கிறார் என. (அது சர்ச் வாசல். நிறைய சில்லறை தேரும்) இதைப் பார்த்துப் பதறிய என் நண்பன் என்னைச் சுற்றிலும் ஏதும் டப்பா இருக்குதா என செக் செய்துவிட்டு இல்லைஎன்ற பிறகுதான் பெருமூச்சு விட்டான்..,(இருந்திருந்தா அட்லீஸ்ட் ஒரு பர்கருக்காவது தேறி இருக்கும்...:( )
நேற்று புதிதாக சில pens வாங்கினேன்... அதை முதல் முறையாக உபயோகித்து வரைந்தது... தொண்ணுறு நிமிடங்கள் செலவானது...
பி.கு: என் ஹெச் எம் இல்லை., தமிழ் எடிட்டரில் காப்பி செய்து பேஸ்ட் செய்ய முடியவில்லை.... அதனால் இந்த 'ஜாக்கி'த தமிழை மன்னிக்கவும்....
போகப் போக தேமுதிக செல்வாக்கு மாதிரி குறைஞ்ச கிட்டே இருக்குது.
ReplyDeleteஅருமையான நிதர்சன ஒப்பீடு.
கைவண்ணம் அழகு...
நல்ல பகிர்வு
ReplyDelete:)) கடைசி வரிகளுக்காக..
ReplyDeleteஅருமை... கைவண்ணம் அழகு...
ReplyDeleteசூப்பர் பதிவும் போட்டோவும்.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி, கிராமத்துக் காக்கை, கேபிள் சங்கர், சே.குமார், ரவிஷங்கர் கிருஷ்ணமூர்த்தி...
ReplyDeleteஅனைவரின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....!