Saturday, October 15, 2011

ஸ்கெட்ச் க்ராவ்லர்ஸ் பெங்களூர் ஷாப்பிங்

காலைல முக்கியமான ஷாப்பிங் போகணும்,. இன்னைக்கு முழுக்கவே ஷாப்பிங்தான் ப்ளான்.ஆனாலும் கொஞ்சம் நேரம் கிடைச்சது. அதனாலஸ்கெட்ச் கிராவ்ல்நிகழ்வுக்குப் போயிட்டேன்.Sketch crawlerss ந்றது, உலகம் முழுக்க எல்லா ஓவியர்களும் ஏதாவது ஒரு இடத்துல ஒண்ணு கூடிக்
கும்மியடிச்சிட்டு, கொஞ்சம் கிறுக்கிட்டு ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ்க்கான இணையதளத்துல அப்லோட் பண்ணனும்.இது மூணுமாசத்துக்கொருக்கா ஏதாவது ஒரு சனிக்கிழமை நடக்கும்(அனேகமா ரெண்டாவது சனிக்கிழமையா
இருக்கும்).

ஏன் அங்க போக முடிவெடுத்தேன்னா, அது பிரிகேட் ரோடு. என் ஷாப்பிங்கையும் அங்க முக்கால்வாசி முடிச்சிடலாம்.ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு; அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சுன்ற கதையா முதல்ல ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ் நிகழ்வுக்குப் போனேன். இது போன்ற நிகழ்வில் நான் கலந்து கொள்வது இரண்டாவது தடவை. நடுவில் ஒரு முறை ஒர்க்ஷாப் ஒன்றிற்குச் சென்றதால் மிஸ் ஆகிவிட்டது. ஆறேழு பேர் வந்திருந்தாங்க.பிரிகேட் ரோட்டில இருக்க ஓபரா ஹவுஸ்தான் டார்கெட். ஆனா இன்னிக்கு ஓவர் வெயில் அஜித்தைப் பொளந்துருச்சு. அதனால கூலா அதுக்கு எதிர்த்தாப்புல இருந்த மால்லகபே காபி டேக்குள்ள தஞ்சம் புகுந்துட்டோம். பென் மட்டும்தான் இருந்தது. அதிலயே அட்ஜஸ்ட் பண்ணி இந்த ரெண்டு படத்தைப் போட்டுட்டேன்.


மதியம் பிஸ்ஸா ஹட் போனா, கல்யாண வீட்டு அப்பளம் சைஸுல இருக்கிறவெஜ் சுப்ரீமோலார்ஜ் க்கு (மூணு பேர் சாப்பிட்டோம்), 600 ரூபா பில்லப் போட்டுட்டான் வக்காளி. பிட்சர் வேணுமான்ன்னு கேட்டான். ‘டேய் நான் சொன்னது செவன் அப்டான்னேன். எனக்குத் தெரிஞ்சதுபிட்சர்னா பீர் தான். அப்புறம்தான் புரிஞ்சதுபிட்சர்னா பெரிய ஜாடியாம். அது ஃபுல்லாக் கொடுப்பானுங்களாம் கூல் ட்ரிங்க்ஸை.


நண்பர்களின் ஆலோசனையோடு புதுக்கேமரா வாங்கியாச்சு. மயில் மற்றும் உமாநாத் செல்வனுக்கு நன்றிகள். அவர்கள் சொன்னது சோனி. ஆனா அது 10 மெகாபிக்சல். அதான் நான் கேனான் 14 மெகாபிக்சல் கேமரா வாங்கிட்டேன். 5 X ஜூம்.விலை ஏழாயிரத்துக்குக் கொஞ்சம் கீழே. முதல் ஃபோட்டோ திருஷ்டி கழிக்கிறதுக்காக சேல்ஸ்மேன் என்னையே எடுத்தாரு. அதனால அத என் டெஸ்க்டாப்ல வச்சிருக்கேன். வெளியாள் பார்வைக்கு அனுமதியில்லை.



ஏகப்பட்ட ஷாப்பிங் இன்னைக்கு. ஒரே ஆள் நான், டூவீலர்ல வச்சுக் கொண்டு வரமுடியல. இதுக்கு ரெண்டு தீர்வு இருக்கு. ஒண்ணு கல்யாணம் பண்ணனும் இல்ல கார் வாங்கணும். இன்வெஸ்ட்மெண்ட் காஸ்ட்,மெயிண்டெனன்ஸ் செலவு ரெண்டும் வச்சுக் கம்ப்பேர் பண்ணிப்பார்த்தா கார் வாங்குறதுதான் பெட்டர்னு தோணுது. என்னலே நாஞ்சொல்றது சரிதானே....???!!!!


ஏன்ப்பா பஸ்ஸை ஷெட்டுல போட்டுப் பூட்டப் போறாங்களாமே அது உண்மையா? :( சரி சரி அடுத்து வர்ற ஹை டெக் ட்ராவல்ஸ்ல (கூகிள்+) ஏறி இடம் பிடிச்சுக்குவோம்....

8 comments:

  1. செம எழுத்து நடை மச்சி....உண்மையாக தான்ய்யா சொல்றேன் ;-))

    ReplyDelete
  2. உங்க பென்சில் ஓவியங்கள் சூப்பர் நண்பரே . .
    எப்படியோ தீபாவளி ஷொப்பிங் முடிச்சுடிங்க

    ReplyDelete
  3. ஓவியங்கள் சூப்பர்.

    ReplyDelete
  4. @கோபி... நன்றி மாப்பி... ஏதோ சொல்ற. வேறவழியில்லை ஒத்துக்கிறேன்...:)

    @ராஜேஷ்....

    நன்றி ராஜேஷ்....!

    ReplyDelete
  5. ஓவியக் கைவண்ணப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete
  6. ravishankar and Rajarajeshwari.... thanks to all....!

    ReplyDelete