கடந்து சென்ற வார இறுதி முழுவதும் வேலை இருந்தது. வேலை என்றால், கரும்பு தின்னுவதுதான். பெங்களூரில் பென்சில்ஜாம் ஸ்டூடியோவில் ,’உருவப்படங்கள்’ வரைவது பற்றிய ஒரு பட்டறை இரு நாட்களாக நடந்தது.
நேரடி உருவப் ப்டங்கள் வரைவது பற்றிய என் முழு எண்ணத்தையும் தகர்த்துத் தூளாக்கிவிடடது. நான் கற்றுக் கொண்டவற்றைச் சிறிது பகிர்கிறேன்.
நேரில் பார்த்து அப்படியே வரைவதல்ல அது. மாடலின் கேரக்டர்களையும், அவர்களின் எக்ஸ்பிரஷன்களையும் சொல்ல வேண்டும்.சொல்லும் விதங்கள்தான் வேறு. photo realistic, Impressionism, expressionism என்ற வகைகள்.ஆனநதவிகடனில் பார்க்கும் இளையராஜாவின் ஓவியங்கள் ஃபோட்டோ ரியலிஸ்டிக் வகையைச் சேர்ந்தது எனினும் அது தெளிவாக எக்ஸ்பிரஷன்களையும் தந்துவிடுகிறது.
இம்பிரஷனிஸம் வகையில், உற்று நோக்கின் வெறும் கிறுக்கல்கள் மட்டுமே தெரியும்.ஆனால் பொதுவாகப் பார்க்கையில் குறிப்பிட்ட மாடலின் கேரக்டரையும், எக்ஸ்பிரஷன்களையும் சொல்லிவிடும்.இது ஓவியரின் திறமைக்கு நல்லதொரு சான்றாகும்.இதற்கு முந்தைய பதிவில் போட்ட ‘இளையராஜா’ ப்டம் இவ்வகையில் நான் முயன்றதாகும்.
எக்ஸ்பிரஷனிசம் வகைகளில் மாடலின் உருவம் தெள்ளத் தெளிவாக இல்லாவிடினும் அவரது எக்ஸ்பிரஷன்கள் தெளிவாகத் தெரிந்துவிடும்.
மேற்கண்ட இரு படங்களிலும் இருப்பவர் ஒரே மாடல்தான். வரைந்த விதம் வேறு.அவங்க மாதிரியே இருக்காது :) நான் வழக்கமாக வரையும் பாணியில் வரையாமல், அங்கு பயின்றதை வரைந்தேன்.(குண்டுச்சட்டில எத்தனை நாள் குதிரை ஓட்டுறது)...முதல் படம் ‘எக்ஸ்பிரஷனிஸம்’ வகையில் சாஃப்ட் பேஸ்டலில் வரைந்தது. இரண்டாவது படம் பென்சிலில் வரைந்தது.
நேற்று ஒரு 6 மணி நேரம் மாடலாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு. ஓய்வின்போது நானும் சக பயிற்சியாளர்களும்(அவங்க ரெண்டுபேரும் பெங்களூர் பொண்ணுங்கதான் :P), அந்த அம்மாவிடம் கேட்டோம், ‘மாடலாக அமர்ந்திருக்கும் போது என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்’ என....
அவரின் பதில் பட்டென விழுந்தது,” என் பிள்ளைகளைத்தான். ரெண்டும் சின்னப் பையங்க. வீட்ல விட்டுட்டு வந்திருக்கேன், இந்நேரம் என்ன பண்ணிட்டுருக்குதுங்களோ...போன வாரம் இப்படித்தான் நான் வெளிய் போய்ட்டு வர்றதுக்குள்ள, கேஸத் தொறந்து விட்டுட்டான் ஒருத்தன். அதான் கொஞ்சம் ப்யம்னு’ சொல்லி முடித்தார்.
உலகத்துல எல்லா அம்மாக்களும் இப்படித்தான் போல.அம்மாக்களின் உலகத்தில் குழந்தைகள்தான் எல்லாமும்....
மேற்கண்ட இரு படங்களும் முதல்நாள் பயிற்சியில் ஒரு வயதானவரை மாடலாக வைத்து வரைந்தது. (இடையில் மாடல் தூங்கிவிட்டார் என்பது வேறுவிஷயம். அது அடுத்தடுத்த படங்களில் தெரியவரும்.) இம்பிரஸனிஸம் வகை.எல்லாமே க்விக் ஸ்கெட்சஸ். இன்னும் 7,8 படங்கள் இருக்கிறது. எல்லாம் பதிவிடவில்லை.
சாஃப்ட் பேஸ்டலில் செய்தது.(முதல்முறை இந்த மீடியம் பயன்படுத்தினேன்.) பரவாயில்லை நன்றாகவே வருகிறது. இதில் மேலும் சில எக்ஸ்பெரிமெண்ட்ஸ் பண்ண வேண்டும்.
இதுவும் சாஃப்ட் பேஸ்டல்தான்.
இது சார்க்கோலில் செய்தது....
மேற்கண்ட மூன்றும், அதே மாடல்தான். எக்ஸ்பிரஷனிஸம் வகையில் செய்தது. க்விக் ஸ்கெட்சஸ்....
மனிதத் தலையின் உள்ளமைப்பை அறிந்து கொள்ள, களிமண்ணில் சிறியதும், பெரியதுமாக மண்டை ஓட்டின் மாதிரி செய்தோம். இதை வைத்து ஸ்ட்ரக்சரை வரைந்து பயிற்சியெடுத்துக் கொண்டோம்...
பொதுவாகக் கற்றுக் கொண்டது, ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ ,
விளைவுகளை விட முக்கியமானது வழிமுறைதான்....
கற்றுக் கொடுத்த ஸ்மிதா சிவசாமிக்கு நன்றி.
இது ஒரு ஆவணப் பதிவு எனக்கு. உங்களுக்குப் பிடித்திருந்தால் இது ஒரு நல்ல பகிர்வாகவும் எண்ணிக்கொள்கிறேன்....
அப்பாடா, ரொம்ப நாளுக்கப்புறம் நீளமாப் பதிவு எழுதியாச்சு....:)
யோவ் மாப்பி நீ என்ன boost குடிக்கிறியா !? ;))
ReplyDeleteஅனுபவ பகிர்வும் - படங்களும் தூள் மாப்பி ;)
Very nice to see you are getting tutored under expert artists. It is quite visible. Please continue..
ReplyDelete@கோபிநாத்...
ReplyDeleteநன்றி மாப்பி... நான் பூஸ்ட்டெல்லாம் குடிக்கிறதில்லை.காஃபிதான்...:)
@கபீரன்பன்....
ReplyDeleteநன்றி சார்... வருகைக்கும், வாழ்த்துக்கும்....!