Sunday, May 22, 2011

எனது வார இறுதி-சல்மா,தனுஷ்,சுஜாதா,பிம்பா

  நேற்றைய இரவின் இரண்டாம் ஜாமம் முழுவதும், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யே ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததனால், காலை ஐந்து மணிக்குத்தான் தூங்கப் போனேன். இன்னொரு அத்தியாயம், இன்னொரு அத்தியாயம் என உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது கதை. நமக்கு அதிகம் அறியாத முஸ்லீம் மக்களின்(பெண்களின்) வாழ்க்கையை ,பெண்களின் வழியாகவும், அவர்களின் பேச்சுக்களின் வழியாகவுமே அறியச் செய்கிறார்....

      குறியீடு, பின் நவீனத்துவம்,இசம், ரசம் என எத்தகைய வெங்காயங்களும் இல்லாமல், இயல்பான உரையாடல்களிலேயே நகர்ந்து செல்கிறது கதை.கதாபாத்திரங்களும், அவர்களின் பெயர், உறவுமுறைகள் நினைவில் வைக்க முதலில் சிரமமிருந்தாலும், கதையோட்டத்தில் பழகிப் போய்விடுகிறது...இன்னும் முடிக்கவில்லை.இரு நாட்களில் முடித்துவிடலாம்.

                          *******************************************************

   சன் டிவியில் ‘ஒத்த சொல்லால’ பாட்டு அமர்க்களப் படுகிறது. முதல் நாள் தியேட்டரில் பார்க்கும்போதே ஆடத் தூண்டிய பாடல். சூப்பர்...
                          ********************************************************
சுஜாதாவின் ‘தீண்டும் இன்பம்’ எடுத்தேன். அரைநாளில் முடித்துவிட்டேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘குப்பை’.
  
படு செயற்கை...:(((((((

                        **********************************************************


இடைப்பட்ட நேரங்களில் ஒரு அனாட்டமி ஸ்டடிக்காக ஒரு பென்சில் ஸ்கெட்ச் ஓடிக் கொண்டிருக்கிறது.நாளைக்குள் முடிக்கத் திட்டம்...ஸ்டெட்லர் பென்சிலில் வரைவதே தனி சுகானுபவம். என்ன ஒரு 8B பென்சிலின் விலை மட்டும் 50 ரூபாய்தான் :)

                         ********************************************************
   இன்று காலையில் வெகுதாமதமாக பத்து மணிக்குத்தான் எழுந்தேன். இன்றைய வீக் எண்ட் ஜாம் ஆக்டிவிட்டி, பசவனகுடியில் உள்ள ‘பிம்பா ஆர்ட் ஃபவுண்டேசன்’ இல். எல்லாமே புது இடங்கள் என்பதால் வெள்ளி மாலை அலுவலகம் விட்டு வரும்போதே A3 size ஷீட்டில் மேப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வேன்.மேப்பில் எளிதாக இருக்கும் வழி, நேரில் சென்றால் மட்டும் குழப்பியடிப்பதேன். எங்கெல்லாம், இரு பாதைகள் பிரியுமோ, அந்த இடத்தில் வந்ததும், தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றும். ஹெல்மெட் இருப்பதால் அதற்கு வழியில்லை. மிகச் சரியாக , தவறான பாதையில் போய்விடுவேன். பின் நீண்ட தூரம் சென்று யாரிடமாவது கேட்டு, யு டர்ன் எடுத்து வர வேண்டும்...கூகிள் மேப்பை விடவும் சிறந்தவர்கள் ஆட்டோக்காரர்கள்.நன்றி....

          பிம்பா ஆர்ட் ஃபவுண்டேஷனில் ஓவியம், இதர கலைகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 100 வருடப் பழமையானது இந்நிறுவனம். பலவித கலை வேலைப்பாட்டுப் பொருள்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.,..
நான் போன நேரம் 12 மணி. குழுவில் மற்றவர்கள் அந்நேரம், அங்கே நடக்கும், ‘ராசலோக்’ எனும் தோல்பாவைக் கூத்தைக் காணச் சென்றுவிட்டனர்.நான் வெளியில் இருந்த ‘சூரிய நாராயணனின்’ சிலை’யை வரைய ஆரம்பித்துவிட்டேன். 75 நிமிடங்கள் பிடித்தது.பால் பாயிண்ட் பென்னில் வரைந்தது...
 

8 comments:

  1. கூகிள் மேப்பை விடவும் சிறந்தவர்கள் ஆட்டோக்காரர்கள்.நன்றி....
    Interesting.

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @இராஜராஜேஸ்வரி....

    நன்றி மேடம்...

    @மதுரை சரவணன்...
    நன்றி சரவணன்...

    ReplyDelete
  5. @கோபிநாத் ...
    நீயே சொல்லிட்டப்புறம் ரைட்டுத்தான் மாப்பி...:)

    ReplyDelete
  6. //குறியீடு, பின் நவீனத்துவம்,இசம், ரசம் என எத்தகைய வெங்காயங்களும் இல்லாமல், இயல்பான உரையாடல்களிலேயே நகர்ந்து செல்கிறது//

    சூப்பர்

    ReplyDelete
  7. நன்றி ரவிசார்...உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நல்ல புத்தக அறிமுகத்திற்கு...

    ReplyDelete