நேற்றைய நாள் முழுவதும் ஊர் சுற்றல்தான். காலையில் ‘அழகர்சாமியின் குதிரை’ டிவிட்டர் நண்பர் TBCD யுடன் சென்றேன். கே.ஆர் புரம் புஷ்பாஞ்சலி திரையரங்கம். டிக்கட் விலை 70 ரூபாய்தான். அழகாகப் பராமரிக்கிறார்கள் திரையரங்கை. சீட்டுகளும் நன்றாக உள்ளது. ஒரே குறை AC போடவில்லை. சரி மின்விசிறியாவது போடலாமல்லவா? அதுவும் இல்லை. வியர்க்க விறுவிறுக்கப் படம் பார்த்துவிட்டு வந்தோம்.
எதிர்பார்த்துப் போன அளவுக்கு படம் இல்லை. ஆனால் நல்லதொரு படம். எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சுசீந்திரனின் முந்தைய இரு படங்களை ஒப்பிடுகையில் இது ஒரு மாற்றுக் குறைவுதான்.இளையராஜாவின் இசை நன்றாக இருந்தது. எனினும் மேற்கத்திய இசை இல்லாமல், நமது இசையையே வழங்கி இருந்தால் ஏகப் பொருத்தமாயிருந்திருக்கும். ஆரம்பத்தில் வரும் ‘அடியே இவளே’ பாடலைப் போலவே, படம் முழுக்க இசையமைத்திருந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் எனக்குப் பிடித்திருந்தது.மெல்லிய நகைச்சுவையோடிய படம்.சுசீந்திரனிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்....
மதியம நந்தினியில் மினிமீல்ஸ் முடித்துவிட்டு, நேரே வண்டியை அவென்யூ ரோட்டுக்கு விட்டேன். இரண்டரைமணி நேரம். ட்ராஃபிக் ஜாமிலேயே ஒரு மணி நேரம் போய்விட்டது. அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. அது ஒரு ரங்கநாதன் தெரு என்று. அங்கு இருபுறமும் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டே வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாகக் கண்டுபிடித்து பர்ச்சேஸ் முடித்துவிட்டுக் கிளம்புகையில் மழை ஆரம்பித்துவிட்டது. அரைமணி நேரம்தான்.அதன் பின் மழையில்லை. திரும்புகையில் ஜில்லென்றிருந்தது. மாலையும், கொஞ்ச நேரம் பெய்த மழையும் பயணத்தை இனிதாக்கியது.
வீடு திரும்பும் வழியில், மாரத்தள்ளி தள்ளி, ஒயிட்ஃபீல்ட் ரோட்டில் இருக்கும் ‘மதுரை மெஸ்’ சென்றேன். அங்கு தோசைகளை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்ததால்தான் இப்படமும், இப்பதிவும் வந்தது. இங்கு உணவு அவ்வளவு நன்றாகவுமிருக்காது. அவ்வளவு மோசமாகவுமிருக்காது...(ஒரு செனரல் நாலெட்ஜூக்குதான்) :)))

நானும் படத்தை பார்த்துட்டேன் ;)
ReplyDeleteநன்றி மாப்பி...
ReplyDelete