Sunday, November 15, 2009

ஒரு கிளி உருகுது...உரிமையில் பழகுது... சர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்காக...

ஒரு கிளி உருகுது.. . உரிமையில் பழகுது….

           சுமதிக்கு எழுந்திருக்கும் போதே சற்றுக் களைப்பாய்த்தான் இருந்தது.காரணமான ரவி சற்றுத் தள்ளிக் குப்புறப் படுத்து, தலையை மட்டும் ஒரு சாய்த்திருந்தான்.அவன் தூங்கும் கோலம் அவளுள் புன்னகையைத் தோற்றுவித்தது.அவன் இன்னும் குழந்தைதான்.கலைந்திருந்த போர்வையை அவன் மீது சரியாகப் போர்த்திவிட்டு,முகத்தினருகில் வருகையில் அவன் மீசையைத் தடவிக் கொடுத்தாள்.கறுகறுவென இருந்தது.அவள் மயங்கியதே இந்த மீசையின் புன்னகையில்தான். மீசை சிரிக்குமா?அவளைக் கேட்டால் சிரிக்கும் என்பாள்.எல்லார் மீசையும் சிரிக்குமோ தெரியாது.இவன் மீசை சிரித்தது. இவளுக்கு அப்படித்தான் தோன்றியது, முதன்முதலில் இவள் அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொன்ன போது.



‘நன்றி..!மீண்டும் வருக’

’வெல்கம் சீனிவாசா’ உணவகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் வசுமதி.தோள் வரையே உள்ள    கூந்தலை அவள் பின்னியிருந்த லாவகம், இன்னும் நீளமோ என யோசிக்கவைத்தது.அவளின் ஐந்தடி உயரம்கூட அப்படி எண்ண வைத்திருக்கலாம்.ஒற்றை ரோஜாவின் வாடிய நிலை, நேரம் சாயங்காலமாகிவிட்டதைக் காட்டியது.உடன் வந்த செல்வி இவளுக்கு முன், பணம் செலுத்திவிடவேண்டுமென்ற முனைப்புடன் தனது தோல் பர்ஸைப் பிரிக்க ஆரம்பித்தாள்.அதற்குள்  வசுமதி இருவரும் சாப்பிட்ட பில்லைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

‘ஏண்டி! நான் கொடுத்திருப்பேன்ல.’

‘சரி கொடுத்துக்கோ.. அடுத்த தடவை’- எனச் சொல்லிவிட்டு உதடு பிரியாமல் சிரித்தாள்.

‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!’-பின்னாலிருந்து குரல் கேட்டது.

தன்னைக் கூப்பிட்டிருக்க மாட்டார்களென எண்ணியும், அனிச்சையாய் தலை திரும்பியது.கொஞ்சமாய் உடலும்.

25 வயது இருக்கலாம். நின்றிருந்தான் அவன்.வார் வைத்த கறுப்பு லெதர்பேக்.கையில் ஹெல்மட்டுடன் இருந்தான்.இன்னொரு கையில் ஏதோ கார்டு இருந்தது.

‘நீங்கதானே வாசுமதி தேவராஜன்?பணம் எடுக்கையில இந்த ஏடிஎம் கார்டு கீழ விழுந்திருச்சு’
 
        உடன் முழுதும் திரும்பி, தன் கைப்பையை நொடிகளுக்குள் சோதனையிட்டுவிட்டு அசடுவழிந்த புன்னகையோடு அவனை நோக்கினாள்.

‘கார்டு என்னதுதான். ஆனா நான் வாசுமதி இல்லை. வசுமதி’

‘ஸாரிங்க..’ என்றவாறு கார்டைக் கொடுத்தான்.

கொடுக்கையில் விரல் நுனிகள் பட்டால் தீட்டு என்பது போல் பவ்யமாய்க் கொடுத்தான்.பளிச்சென்ற நகங்கள் வெட்டப்பட்டு அளவாய் இருந்தன.கொடுத்தவிதத்தில் அவன் முகத்தையும் கவனிக்கத் தோன்றியது.கார்டை வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ்’ சொல்லியவாறே ஏறிட்டுப் பார்த்தாள்.எண்ணெய் இல்லாத தலைமுடி, பிரில்கிரீமின் உபயோகத்தில் பளபளத்தது.மாநிறம்.சாதாரண கண்கள் கண்ணாடிக்குள் அடைபட்டிருந்தன. மூக்கு ஒன்றும் பிரமாதமில்லை.உதடு சற்றுக் கறுத்திருந்தது.லேசாகச் சிரிக்கவும் பிரயத்தனப்பட்டிருந்தான். அந்த சிரிப்பு அவன் மீசையோடு சேர்ந்து கொண்டாற்போல் இவளுக்குப் பிரமை ஏற்பட்டு லயித்திருந்தாள். லயித்தல் பிறிதொரு சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தித் தந்தது இவளுக்கும், அவனுக்கும்.அவை ‘ஹாய்’களாகத் தொடங்கி, ஒரே மேஜையில் உணவருந்தவும் வழி செய்தது.



               ணவு மேஜையில் அமர்ந்திருந்தான் ரவி.மேஜையில் காலி தட்டுக்கள் இருந்தன. இன்னும் ரெடியாகவில்லை போலும்.

‘வசு… என்ன டிஃபன்… சீக்கிரம் கொண்டு வா.. எனக்கு டைம் ஆச்சு’

‘கொஞ்சம் பொறுமையா இருப்பா. வந்துடுறேன்.எனக்கென்ன நாலு கையா இருக்கு’

‘உனக்கு நாலு கை வேணாம். இன்னும் ரெண்டு உதடு இருந்தாப் போதும். நீ டிஃபனே பண்ணவேணாம்.’

‘ஐயோடா…காலங்காத்தாலேயா ரொமான்ஸா.இதோ ரெடியாயிடுச்சி’ -சொல்லும்போதே இரவின் நினைப்பு வந்து போனதில் கொஞ்சம் கூசியது வசுமதியின் உதடுகள்.
 
       வி பறக்கும் இட்டிலியின் சூட்டினைச் சுவை பார்த்துக் கொண்டிருந்தன தட்டுகள்.வெங்காயச் சட்னி இவனுக்கு. தேங்காய்ச் சட்னி இவளது ஃபேவரைட். ஆளுக்கொரு சட்னியில் இட்டிலிகளைக் காலி செய்து கொண்டிருந்தனர்.இவனுக்கு முன் அவள் உண்டு முடித்திருந்தாள்.

‘ஏண்டி நீயெல்லாம் தமிழ்ப் பொண்ணா? புருஷன் சாப்பிடுறதுக்கு முன்னாடியே சாப்பிடுறே’-குறும்புடன் கேட்டான் ரவி.

‘நான் எங்க உங்க முன்னாடி சாப்பிட்டேன். சைடுல உக்காந்துதானே சாப்பிட்டேன்’

ஒரு நொடி புன்னகைப்பது போல் பாவலா காட்டிப் பின் அமைதியாய் ‘சிரித்தது போதுமா?’ என்றான்.

‘போதும். கையைக் கழுவிட்டு ஆஃபீஸ் கிளம்புங்க. நேரமாயிடுச்சு’

         வசர,அவசரமாக உடைமாற்றி, ஷூக்களுக்குத் தன் கால்களையும் கொடுத்து, வண்டிச்சாவியையும், ஹெல்மெட்டையும் எடுத்துக் கிளம்புவதற்குள் மணி எட்டாகியிருந்தது.எட்டு ஐந்துக்குள் வண்டியைக் கிளப்பினால்தான் சரியான நேரத்திற்குச் செல்ல முடியும்.

 ‘ரவி… நாம மீட் பண்ணி இன்னையோட நூறாவது நாள். ஞாபகம் இருக்குல்ல’

‘இல்லாமயா…’ என்றவாறு கதவினைத் திறந்து வெளியேறினான்.

’ஈவ்னிங் வெளிய போலாம். சீக்கிரம் வர ட்ரை பண்றேன். பாய்’

புன்னகையோடு கையசைத்த வசுமதி வீட்டிற்குள் நுழைந்தாள்.



              ண்டியில் சாவியை நுழைத்து லாக்கை விடுவித்துவிட்டுப் பின் வண்டியிலேறி அமர்ந்து கிக்கரை அழுத்தினான்.நோ ரெஸ்பான்ஸ்.இன்னொரு முறை. இன்னும் நான்கைந்து இன்னொரு முறைகள் தோல்வியைத் தந்தன. டேங்கை குலுக்கிப் பார்த்ததில் பெட்ரோல் இருந்த சுவடில்லை.பெட்ரோல்  சமீபத்தில்தான் போட்டதாக ஞாபகம்.’வீடு, ஆஃபீஸ் தவிர வேறு எங்கும் சுற்றவுமில்லையே….அதற்குள் எப்படித் தீர்ந்தது.’ நினைத்து முடிப்பதற்குள் மணி 8.10 ஐக் கடந்திருந்தது.

        பாஸுக்கு ஃபோன் செய்து லேட்டாக வருவதைத் தெரிவிக்கலாமென செல்ஃபோனை எடுக்கச் சட்டைப் பைக்குள் கைவிட்டவன் விரல்கள் அவன் நெஞ்சினைத்தான் வருடின.அடடா அதையும் மறந்துட்டோமா என அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வசுமதி இவனது பரபரப்பைப் பார்த்துவிட்டுப் பின்னாடியே வந்தாள்.

‘என்ன ஆச்சு … ஆபீஸ்க்கு லேட்டாயிருச்சு.. இன்னும் போகலையா.. உள்ள என்ன தேடிக்கிட்டிருக்கீங்க?’ என்றாள்.

‘வண்டில பெட்ரோல் இல்ல. பாஸூக்குச் சொல்லலாம்னா செல்ல மறந்துவச்சுட்டேன்.அவசரத்துல வச்ச இடத்துல கிடைக்க மாட்டேங்குது.’

‘நீங்க எப்பயுமே இப்படித்தான். இருங்க நானும் தேடுறேன்’ என்று களமிறங்கினாள் வசுமதி.

‘சரி உன்னோட செல்லில இருந்து ஒரு கால் கொடு. ‘

‘ஐயய்யோ என்னதுல பேலன்ஸ் தீர்ந்துடுச்சி. கால் பண்ண முடியாது’

‘மெஸேஜ் ஆவது பண்ணு. டோன் வருதான்னு பார்ப்போம்.’

வசுமதி மெஸேஜ் அனுப்பினாள். வீடெங்கும் காதுகளை அலையவிட்ட ரவிக்கு ஏமாற்றமே….



            டென்ஷனில் வேர்த்திருந்தது ரவிக்கு. அருகில் வந்து தன் புடவைத் தலைப்பால் அவன் முகம் துடைத்தவாறே சொன்னாள்..

‘கொஞ்சம் அமைதியா இருங்க.வெளியே போய் ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்’
 
      சோபாவில் அமர்ந்து சற்று ரிலாக்ஸான ரவியின் அருகில் வந்தமர்ந்த வசுமதி ‘பெட்ரோல் பங்க் நாலு கி.மீ.இனிமே தெருமுனை வரை நடந்து போய் ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸூக்குப் போய்த்தான் ஆகணுமா. அதான் தடங்கலாயிடுச்சில்ல. நம்ம செலப்ரேஷன் டேயவாவது கொண்டாட…..லா….மா? ’ என மெதுவாக இழுத்து முடித்தும் முடிக்காதவளைப் பார்த்தான்.எவ்வளவு கோபத்தையும் கரைத்துவிடுகிற அப்பாவி முகம்.சோகத்தில் இருப்பது போன்ற கண்கள் சொல்லுவதோ காதல் சேதி.அழுதால் கூட அழகாய் அழும் உதடுகள். இவை அழுவதை விடவும் சிரித்தால் பெட்டரா இருக்குமே.நூறாவது நாள் கொண்டாட்ட சேலை இவனுக்குப் பிடித்த மயில் கழுத்து நிறத்தில், அவளின் அழகை இன்னும் கூட்டியது. கழுத்து திடீரென மயில் கழுத்து போலக்கூடத் தோன்றி மறைந்தது.அதென்ன கழுத்தில் உத்திராட்சக் கொட்டை. மேலே பார்த்தால் கடுகடு மேனேஜர் மூஞ்சி தெரிகிறதே….

‘என்னய்யா… இன்னைக்கு ஆடிட் பத்தி டிஸ்கசன்னு சொன்னேன்ல. ஒரு மணி நேரம் லேட்டா வந்திருக்க.’

‘ஃபோன் பண்ணிச் சொன்னேன்ல சார்’

‘சொல்லிட்டா ஒரு மணி நேரம் உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆயிருமா? இருந்து வேலையை முடிச்சிட்டுப் போ.’

‘சார்.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்…பெர்சனல் ஒர்க் இருக்கு’

‘யோவ் என்னய்யா நினைச்சுட்டிருக்க… வர்றது லேட்டு.. போறது சீக்கிரமா.. இந்த இழவுக்கு உன்னய யாருயா வரச்சொன்னா…லீவப் போட்டிருக்கலாம்ல’

‘போட்டிடுறேன்’ சார் என்றவாறே நிகழ்காலத்துக்கு வந்தான்.

     பெட்ரோல் பங்க் தூரமும், ஆட்டோ குலுக்கலும், எரிந்து விழும் மேனேஜரும், வீட்டு நினைப்பில் அலுவலகத்தில் இருப்பதையும் கண்முன் நினைத்துப் பார்த்தான்.அவள் போட்டிருந்த கோகுல் ஸாண்டல் பவுடர் ,வியர்வையில் தோய்ந்து புது வாசத்தினை அவனுக்குக் காட்டியது.சில நேரங்களில் வாசமும் புது நேசம் சொல்லும்.நாளைய கவலை நாளைக்கு… அதுக்காக இன்றைய தருணத்தை நழுவ விடுவதா…

.
முழுதாக இயல்புக்கு வந்தவன் அவளிடம் சொன்னான்.

‘லாம்.’

புன்னகையில் மலர்ந்த வசு, ‘அப்போ வாங்க.. முதல்ல பிள்ளையார்கோயில் அப்புறம் மாயாஜால், ஈவினிங் நம்ம கோயில் ‘வெல்கம் சீனிவாசா’ ஹோட்டல். சீக்கிரம் கிளம்பலாம்’-பரபரப்புடன் சொல்லியவாறே ‘இச்’சிட்டு எழுந்தாள்.

’சரி சரி முதல்ல மொபைல்ல தேடுவோம்.’


                ருவரும் தேட ஆரம்பித்தனர். அரை மணித் தேடலுக்குப் பின், அவன் தலையணைக்கடியில் மொபைல் இருந்தது.எடுத்துக் கொண்டே,’பெட்ரோல் வாங்கிட்டு வர்றேன்’ எனக்கிளம்பினான்.

பாஸுக்கு முதலில் ஃபோன் செய்து லீவ் சொல்லிவிடலாமென மொபைலை எடுத்ததில் ஒரு மெஸேஜ் வந்தது தெரியவந்தது.வசு அனுப்பியது தான் எனத் தெரிந்து திறந்தான்.

‘வேணாங்க ….. இங்க ஒரு பாட்டில்ல பெட்ரோல் இருக்குது,. நான் நேத்து என் திறமையில சம்பாதிச்சது. இப்போதான் ஞாபகம் வந்தது’ -வசுமதியின் குரல்  கிண்டலாகக் கேட்டது.

செல்போன் திரையில் தெரிந்த ‘ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது’ என்ற வசுவின் மெஸேஜ், வடிவேலுவின் குரலில் இவன் காதுகளில் ஒலித்தது.


40 comments:

  1. நல்லாயிருக்கு தல..;))

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  2. @கோபிநாத்....
    வாங்க தலை.. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி...

    ReplyDelete
  3. பரிசு உண்டு பாஸ்!எழுதி வச்சுக்கிருங்க.

    ReplyDelete
  4. காதலும் கதையுமாய் நல்லதொரு சிறுகதை.அண்ணா வாழ்த்துக்கள் பரிசு கிடைக்க.சரி....பரிசு கிடைச்சா எங்களுக்கும் தானே !

    ReplyDelete
  5. ஏன்....எதற்கு...இப்படி....:)
    அநியாயத்திற்கு ரொமான்ஸ்.....

    ReplyDelete
  6. நல்லா இருக்கு.நல்ல ரோமான்ஸ்.

    (இரண்டாவது பாரா
    அவளின் முதல் சந்திப்பு with ரவி என்பது இரண்டாவது வாசிப்பில்தான் தெரிகிறது.அப்படி இல்லாவிட்டால்
    ////முதன்முதலில் இவள் அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொன்ன போது//
    இதை மனதில் வைத்துக்கொண்டு இரண்டாவது பாராவுக்கு வரவேண்டும்)

    இந்த “ப்ளான் பண்ணாத” என்ற நச்
    எப்படி? புரியல?

    ReplyDelete
  7. காதல்ன்னு வந்துட்டா மனுஷன் உருகுறாரு. ரவிஷங்கர் சொன்னது போல எனக்கும்..

    வாழ்த்துகள் சகா..

    ReplyDelete
  8. வாவ், நல்லா இருக்கு பரணி. எக்கச்சக்க ரொமான்ஸ். ஆல் தி பெஸ்ட்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. :-) nice

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @பா.ராஜாராம்...
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி பாரா சார்.பெரியவங்க வாக்கு பலிக்கட்டும்.குறிச்சு வச்சிக்கிறேன்...

    @ ஹேமா....
    பரிசு வந்தா உனக்கில்லாமயா ஹேமா...
    கண்டிப்பாக.. வாழ்த்துக்கு நன்றி...

    @இரா.வசந்தகுமார்...
    வாங்க தலைவரே... கருத்துக்கு நன்றி...//அநியாயத்துக்கு ரொமான்ஸா..//
    ’காமக்கடும்புனலை’ விடக் கம்மிதாங்க..:-)

    ReplyDelete
  11. @கே.ரவிஷங்கர் & கார்க்கி...
    கருத்துக்கு நன்றி...
    ///முதன்முதலில் இவள் அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொன்ன போது//
    இதை மனதில் வைத்துக்கொண்டு இரண்டாவது பாராவுக்கு வரவேண்டும்)//

    அப்படித்தான் வரவேண்டும். தேவையில்லாமல் அவன் அறிமுகமாவது பற்றிச் சொல்ல விரும்பவில்லை சார்.கண்டிப்பாகப் புரிந்து கொள்வார்கள் என நம்பினேன். சிறுகதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினேன்.. உங்கள் பின்னூட்டம் கண்டபின்புதான் நானே இன்னும் நூறடிப் பள்ளத்தில் இருப்பது தெரிந்தது. :-) (ச்சும்மா தமாஷு)

    ‘நச்’ முடிவு பற்றி...

    //‘வேணாங்க ….. இங்க ஒரு பாட்டில்ல பெட்ரோல் இருக்குது,. நான் நேத்து என் திறமையில சம்பாதிச்சது. இப்போதான் ஞாபகம் வந்தது’ -வசுமதியின் குரல் கிண்டலாகக் கேட்டது.//
    இந்த வரிகளிலேயே ‘நச்’ வந்திருக்க வேண்டும். அதுவரை யார் செய்தது எனத் தெரியாமல்,இந்த வரி படித்தபிந்தான் வசுமதி பெட்ரோலைப் பாட்டிலில் அவன் வண்டியிலிருந்து திருடியிருப்பாள்(..?). எனச் சொல்ல நினைத்தேன்.

    அடுத்தவரி அவளது திட்டத்தையும், குறும்பையும் ஒருசேரச் சொல்வது போல் காட்ட எண்ணினேன். அதனால் வடிவேலுவின் புகழ்பெற்ற ‘ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது’ சேர்த்தேன் வால் போல. that means, she planned pukka and succeeded.

    குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி...இனிவரும் கதைகளில்(...?) திருத்திக் கொள்ள முயல்கிறேன்...

    ReplyDelete
  12. @அனுஜன்யா...
    நன்றி அனு சார்.. அழைப்பை மதித்து வந்து படித்து வாழ்த்தியதற்கு...
    எக்கச்சக்க ரொமான்ஸா...? எழுதும்போது எனக்கே கூசியது. நான் இன்னும் சின்னப்பையந்தானே...

    @மண்குதிரை...
    வாங்க கவிஞரே.. ரசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. தயவு செய்து உங்கள் பாணிப்படியே எழுதுங்கள்.யாருக்காகவும் மாறாதீர்கள்
    ப்ஃளோவை விடாதீர்கல்.சுயம்
    போய்விட்டும்.நான் சொன்னது ஒரு டெக்னிகல் விஷயம்தான்.

    ஆனால் யோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. // எக்கச்சக்க ரொமான்ஸா...? எழுதும்போது எனக்கே கூசியது. நான் இன்னும் சின்னப்பையந்தானே... //

    Haiyo Haiyo

    ReplyDelete
  15. நன்றி ரவி சார்...

    மகேஷ் நம்புப்பா...

    ReplyDelete
  16. அண்ணோவ்..பின்னி பெடலேடுக்கரத பார்த்துருக்கேன்...நீங்க பெடலெடுத்து பின்றீங்க வாத்யாரே....இனிமே நீங்கள் "ப்ளாக் உலகத்தோட தபு சங்கர்" ....
    என்று உலக தமிழர்களால் அன்போடு அலைகளிகபடுவீர்கள்....ச்சே,அழைக்கபடுவீர்கள்...(சாரிப்பா..கி போர்டு ரோல் ஆய்டுச்சு....)

    ReplyDelete
  17. @நசரேயன்...

    வாங்க நசரேயன்.. வாசிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள்...

    @வெளியூர்க்காரன்...
    வாங்க தலைவரே.. புதுசா இருக்கீங்க.. ஏரியாப் பக்கம்... பட்டம்லாம் கொடுத்துப் பதறவைக்கிறீங்க..முதல் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி...

    ReplyDelete
  18. ஒண்ணு சொன்னாலும் வெளியூர்க்காரன் பொன்னு போல சொல்லியிருக்கார்.

    நவீனக் கவிஞர், ஓவியத் துடைப்பாளி..இல்ல..படைப்பாளி, தமிழ் ப்ளாக் உலகத் தபுசங்கர் அண்ணன் தமிழ்ப்பறவையார் வாழ்க...வாழ்க...

    ReplyDelete
  19. @இரா. வசந்தகுமார்...
    :-)

    @தியாவின் பேனா...
    நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  20. கதை கவிதை நடையில... நல்லா இருக்குங்க.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. நல்ல ரொமாண்டிக் கிளைமாக்ஸுடன் நச் கதை.!

    கதையில் நல்ல புளோ இருக்கிறது. இருந்தாலும் ஆரம்பப்பகுதிகளில் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம்.

    அப்புறம் பாரகிராப் மற்றும் வரிகளை அலைன் செய்யுங்கள். ஒரு வாக்கியம் முடிந்ததும் ஸ்பேஸ் விடுங்கள். அப்போதுதான் படிக்க சுகமாக இருக்கும்.!

    ReplyDelete
  22. @ராம்குமார்-அமுதன்...

    வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி அமுதன்...

    @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி...உடனடி விமர்சனத்திற்கு...
    //
    ஆரம்பப்பகுதிகளில் கொஞ்சம் எடிட் பண்ணியிருக்கலாம். //
    அடுத்த கதையில் சரி செய்ய முயல்கிறேன்..
    அலைன்மெண்ட் சரிசெய்துவிடுகிறேன்...
    நன்றி...

    ReplyDelete
  23. வணக்கம் தமிழ்,

    ஒரு ரசனை கதையை கொடுத்திருக்கிறீர்கள்., மிக பிடித்தது எழுத்து நடையும், கதையின் போக்கும். கதை ஆரப்பித்தது தான் தெரியும் எப்படி முடித்தேன் என தெரியவே இல்லை. அத்தனை சுவாரசியம்,

    மிக ரசித்த இடங்கள்
    //தோள் வரையே உள்ள கூந்தலை அவள் பின்னியிருந்த லாவகம்...//
    //ஆவி பறக்கும் இட்டிலியின் சூட்டினைச் சுவை பார்த்துக் கொண்டிருந்தன தட்டுகள்//
    ஷூக்களுக்குத் தன் கால்களையும் கொடுத்து//
    இச்’சிட்டு எழுந்தாள்.//


    என கவிதையை அள்ளி தெளித்திருக்கிறீர்கள்.
    நச் பத்தி சொல்லும் போது இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கலாமோ என தோன்றியது அதுவும் சர்வேசன் நச்சுக்காக தான் மற்ற படி கதையின் ஆரம்பத்தில் எறினால் வழுக்கி விழுவது மாதிரி சட்டென முடிவுக்கு மின்னல் வேக ரயிலாய் இழுத்து செல்கிறது.

    நான் உன்னிப்பாக ரசித்த லயித்த விடயங்கள் தான் உங்களையும் ரசிக்க வெத்திருக்கிறது. சரியான சிந்தனை பகிர்வு தான் நண்பரே.

    ReplyDelete
  24. நன்றி அடலேறு நண்பரே...

    ரசித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அவை நானும் ரசித்து எழுதியதுதான்..
    ‘நச்’ பற்றி...
    அது இந்தக் கதைக்கு இவ்வளவு போதுமெனத் தோன்றியது. ஒரு இயல்பு அல்லது சற்றே மிகை இயல்பு (ரசனைக்காக) அவ்வளவுதான் என் எண்ணம்.. அதனால் அதிரடி தேவையில்லை என முடிவு செய்தேன். இந்த முடிவை நெய்தேன்...

    ReplyDelete
  25. கதை நன்றாக இருக்கிறது.
    பார்த்து 100 நாள் ஆனது என்பதால், கடைசியில் இருவரும் கல்யாணம் செய்யாமல் வாழ்ந்துகொண்டிருப்பது போன்ற நச் இருக்குமோ என எதிர்பார்த்தேன். இல்லை. இந்த முடிவும் அழகாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அதிபிரதாபன்(பேர் நல்லா இருக்கு)...

    நீங்க சொன்னது கூட நல்லா இருக்க மாதிரிதான் இருக்கு...

    ஆனா எனக்கு அந்த கான்செப்ட் பிடிக்காததால தோணலையோ என்னவோ? : :-)

    ReplyDelete
  27. நல்ல எழுத்து நடை உங்களுடையது. லாவகமா கொண்டு சென்று இருக்கிறீர்கள் கதையை,. முதல் இருபதில் வந்தமைக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் !!!

    கதையில் உள்ள கவிதை நடை ஈர்க்கிறது!!!

    ReplyDelete
  28. வந்திருந்து, ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி காவிரிக் கரையோன்....

    ReplyDelete
  29. நல்ல ஒரு romance கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. நன்றி ஜெஸ்வந்தி... முதல் வருகைக்கும், ரசித்து வாழ்த்தியமைக்கும்...

    ReplyDelete
  31. sema kathainga nijamave.. potiyil vetri pera vaazhthukkal. :) :)

    ReplyDelete
  32. ஓவியரின் கைவண்ணத்தில் ஒரு வித்தியாசமான நச் கதை. நல்ல வர்ணனைகள் அழகாகக் கதையை நகர்த்திச் செல்கிறது. முதல் இருபதில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. Idhukku Melayumaa extra alaghu yethanum.............
    super appu.............

    ReplyDelete
  34. @சதங்கா...

    வாங்க சார்... வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

    @BOSS

    வாங்க பாஸ்... பேரைத் தவிர அடையாளமில்லை. எனினும் தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  35. really super. i expect strong message from your story in future.
    saravanan

    ReplyDelete
  36. bharani really superb and it was very interesting
    u have a bright chance in cine field
    anyways jokes apart and all the very best
    by
    e.arunkumar

    ReplyDelete