parani....
Monday, April 23, 2012
Sunday, April 1, 2012
சாப்பாடு சிறப்பு சும்மாட்ராக்கள் + வான்காஃப்+சைக்கிள் -நீர்வண்ண ஓவியங்கள்
ஊருக்குப் போய் வந்தது அலைஞ்சதுன்னு, கொஞ்சநாளாவே ப்ளாக் அப்டேட் இல்லை.விசைப்பலகைக்கு ஓய்வு கொடுத்தாலும் தூரிகைக்குக் கொடுக்கவில்லை.அவ்வப்போது வரைந்தவற்றில் சில இங்கு,,,
கேரளமீன் வறுவல்(சாப்பிட்டதில்லை.ஆனால் வரைந்ததில் ஃபேவரைட்:) )
அப்பளம்
பழக்கூட்டு, ஐஸ்கிரீம் மற்றும் ஜெல்லி
தோசை
இதர சில சும்மாட்ராக்கள்
சைக்கிள்(A4 size)
பென் ட்ரைவ் (என்னோட sandisc) :))

சமோசா
இதர சில சும்மாட்ராக்கள்
சைக்கிள்(A4 size)
தீப்பெட்டி
பென் ட்ரைவ் (என்னோட sandisc) :))
Tuesday, March 27, 2012
திருமண அழைப்பிதழ்-எனது வடிவமைப்பு
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் திருமணம் நிச்சயித்த உடனேயே சொல்லிவிட்டார், ‘தலைவரே,நம்ம இன்விடேஷன் நீங்கதான் டிசைன் பண்ணனும்னு’...அந்தா இந்தான்னு தள்ளிப்போட்டுட்டேன். சரியாத் தோணலை. கூகிள் இமேஜஸ் பார்க்கையில், மோட்டார்சைக்கிளில் ஒரு சோடி செல்வது போன்ற படம் பார்த்தேன். அடடே...இது நல்லா இருக்கே...
எத்தனை நாள்தான் திருமணப்பத்திரிக்கையில் ஆணும், பெண்ணும் கழுத்து வலிக்க மாலையோடும், கைநிறையப் பூச்செண்டோடும் காட்சியளிப்பது?? கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமென , நான் பார்த்த புகைப்படத்தை லைன் ட்ராயிங்காக மாற்றினேன் ஆர்டிஸ்ட் பென் உதவியுடன். மாப்பிள்ளைக்கு அனுப்பி அபிப்ராயம் கேட்டதில் , பெண்ணுக்குப் பிடித்துவிட்டதெனச் சொன்னார்.அப்ப இவருக்கும் பிடிச்சமாதிரித்தான் என எண்ணிக் கொண்டேன்.
கொஞ்சம் வண்ணங்களைப் பூசி, நம்பர் ப்ளேட்டில் அவர்களின் திருமணத் தேதியை எழுதிவிட்டதில் திருமண அழைப்பிதழ் தயார்....:)))
பி.கு: கூகிளில் புகைப்படம் பதிவேற்றிய ஃபோட்டோகிராஃபர் நண்பருக்கு (Paul) க்கு நன்றிகள்....

Thursday, March 8, 2012
லால்பாக் பென்சில்ஜாம் @ 04மார்ச்12 மற்றும் சில சும்மாட்ராக்கள்
நான்காம்தேதிய பென்சில்ஜாம் நடந்த இடம் , வேறெங்க, கழுதெ கெட்டாக் குட்டிச் சொவருதான்....:) லால்பாக்தான்...
ஒவ்வொரு வருகையிலும் ஒவ்வொரு அழகை ஒளித்துக்காட்டுவதில் லால்பாக்கும் ஒரு காதலிதான் எனக்கு ;)
எங்கள் கூடல் இம்முறை ஜப்பானிய மூங்கில் பாலம் அருகில். புதிதாக இரண்டு ’பெண்’’ஜில்’ ஜாம்மர்கள் வந்திருந்தனர். பேக்கு போல முழித்துக் கொண்டிருந்த அழகிகளை வரவேற்றேன்...நாந்தான் பென்சில் ஜாம்மர்ஸ் அட்மின் நு ஒரு பில்டப் கொடுத்தேன். பரவாயில்லை, நல்லாவே மரியாதை கிடைக்குது. நுழைவுக் கட்டணம் 500 ரூபாய்ன்னு சொன்னதும் மிரண்டன மான்களின் விழிகள். அதற்கு மேல் விளையாட்டை இழுக்காமல், உண்மையைச் சொல்லிவிட்டேன்....
காலையில் வரைந்தது இரு வாட்டர்கலர் லேண்ட்ஸ்கேப்புகளும்....
மதியம் லஞ்ச், அருகிலுள்ள ஹரி சூப்பர் சாண்ட்விச்சில்....அடடா அடடா... எத்தனைவகை சாண்ட்விச், தயிர் சாண்ட்விச், சீஸ் சில்லி சாண்ட்விச், குல்கந்து சாண்ட்விச், சாக்லேட் சாண்ட்விச் இன்னும் பல...
ச்சாட் வகையறாவாக, ‘காங்கிரஸ் மசாலா’ இருந்தது, என்னடான்னு கேட்டா, ஒரு காலத்துல காங்கிரஸ் இரண்டாப் பிரிஞ்சதனால, இரட்டையாகப் பிளவுற்ற கடலையைப் போட்டு மசாலா தடவி விற்பது காங்கிரஸ் மசாலாவாம். அடப்பாவிங்களா...அப்டிப்பார்த்தா, எங்கூர்ல டாஸ்மாக்ல தர்ற பொடிமாஸ்ஸைத்தான் காங்கிரஸ் மசாலான்னு சொல்லணும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன்:))
அப்டியே சுத்திட்டு, மாலை வரைந்தது இந்தத்தூண்...வேடிக்கை பார்த்த பையனொருவன் அருகில் வந்தான். அவனையும் வரைந்து கொடுத்தோம்.
AXE effect
சாவி

இனிதே நிறைவுற்றது அன்றைய நாள்...
இனி சிறிது சும்மாட்ராக்கள், இடைப்பட்ட காலத்தில் செய்தவை...
பெண்கள் தின சிறப்பு ஓவியம்
AXE effect
சாவி
Sunday, February 26, 2012
பென்சில் ஜாம் @ பார்க்கிங் ஏரியா மற்றும் சில சும்மா ட்ராக்கள் 26ஃபெப்12
அவ்வ்வ்...இன்னிக்கு பென்சில்ஜாம் நடக்க இருந்த இடம் பெங்களூர் turf club. அதற்கான முன் அனுமதியெல்லாம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.ஆனால் அங்கு சென்றால் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து அனுமதி வரவில்லையாம். வரைஞ்சா அங்கதான் வரையணுமா என்ன, வெளிய ரேஸூக்காக வருபவர்களின் பார்க்கிங் ஏரியாவில் பட்டறையப் போட்டாச்சு.
அங்க ரொம்பநாளாக் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த டாட்டா சுமோவும், சில ஸ்கூட்டர்களும்தான் என் கண்களை ஈர்த்தன.
ரெய்னால்ட்ஸ் பென்னில் A5 size ஸ்கெட்ச் புத்தகத்தில் வரைந்தது.
கீழே உள்ளவை இடைப்பட்ட நாட்களில் கிறுக்கிய சும்மா ட்ராக்கள்...
காந்தி
இது சும்மா ட்ரா ப்ளாக்ஸ்பாட்டின் 100 வது தலைப்பு 100 க்காக வரைந்தது
திராட்சைகள்
வால்ரஸ்
காரட்

Tuesday, February 14, 2012
காதலர்தினக் கொண்டாட்ட ஓவியம் 14ஃபிப்12
காதலர்தின வாழ்த்துக்கள்
எனது ட்வீட்ஸ் + ஓவியம்
தவிர்ப்பவர்களால் கூட வெறுக்க முடியாத ஒரு விஷயம் காதல்தான்
காதலை மூட்டைகட்டி விட்டு வாழ்க்கையைப் பார்க்கச் சொன்னாள்.அதனால்தான் முதுகில் சுமந்துகொண்டு திரிகிறேன்.
காதலைச் சொல்வதில் உனக்கும் எனக்குமான உத்திகள் நேரெதிரானவையாக இருந்தாலும்,பிரிதலில் மட்டும் ஒரே வழிதான்,’உன்மேல தப்பு’
காதலில் மட்டும்தான் நிறைகுடமும் தளும்பும்
காதலிலும், குழந்தைமையிலும் மட்டுமே திருட்டுத்தனங்களும் ரசிக்கும்படி இருக்கும்
கண்ணி வெடிகள் புதைந்திருக்கும் உன் மௌனத்தில் ஒரு சொல் வைக்கவும் அச்சம்
கடலையும் காட்டி, படகையும் கொடுப்பது வாழ்க்கை.துடுப்பினைப் பிடுங்கி,கண்களையும் கட்டுவது காதல்#கிக் வேணும்ல
காதலைச் சொல்வதற்கு மிக நளினமான வழி,’அதை நாசூக்காக மறைப்பதுதான்’

Tuesday, February 7, 2012
ஸ்டில் லைஃப் முயற்சி- நீர்வண்ண ஓவியம்
ஊருக்குப் போயிருந்தேன். ஸ்டில் லைஃப் பண்ணலாம்னு முயற்சி பண்ணா, சரியான பொருட்கள் கிடைக்கலை. கிடைச்சவரைக்கும் வாழைப்பழம், வாட்டர்பாட்டில் ரெண்டையும் ஒரு வாளியைக் கவுத்தி தலைகீழா வச்சு அதுமேல வச்சேன். ஒரு எஃபக்டுக்காக, அப்பாவோட வேட்டியை(மடிச்சு பீரோல இருந்தது) வாளிமேல் போர்த்தி அதன்மேல பழத்தையும், தண்ணீர்பாட்டிலையும் வச்சேன். செட்டப் ரெடி.
A4 size Arches watercolor பேப்பர்ல இதைப் பண்ணிமுடிக்க இரண்டரைமணிநேரம் ஆனது.
இது எங்கவீட்டு ஜன்னலில் தெரிந்த வெளிப்புறக்காட்சி

Friday, January 27, 2012
சித்திரசந்தை பெங்களூர்
ஆண்டுக்கொருமுறை பெங்களூர் சித்ரகலா பரீஷத் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ,சித்ரசந்தை என்னும் ஓவியக் கண்காட்சி சித்ரகலாவால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கு செல்க...
http://chitrasanthe.com/
சென்றமுறை நடந்த போது, நான் பெங்களூரில் இருந்தாலும் தவறவிட்டுவிட்டேன். இம்முறை எனது 10 ஓவியங்களையும் காட்சிக்கு வைக்கிறேன்.விருப்பமும், நேரமும் இருப்பவர்கள் தவறவிடாதீர்கள்...

Thursday, January 26, 2012
Wednesday, January 25, 2012
Monday, January 23, 2012
Thursday, January 19, 2012
பிடித்த சும்மாட்ராக்கள் 17ஜன12 முதல் 19ஜன12 வரை(ந்தவை)

எல்லாமே A5 கேன்சன் ஸ்கெட்ச் புக்கில் வரைந்தவை.
முதலில் வரைந்த ப்ரெட்ஜாம் , பென்சில்ஜாம்மர்ஸ் தளத்தில் featured செய்யப்பட்டு அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
பிற்சேர்க்கை: முதலில் வரைந்த ப்ரெட்ஜாம் , பென்சில்ஜாம்மர்ஸ் தளத்தில் featured செய்யப்பட்டு அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
http://penciljammers.com/photo/photo/listFeatured

Monday, January 16, 2012
Sunday, January 8, 2012
Subscribe to:
Posts (Atom)