Saturday, December 24, 2011

நந்தி ஹில்ஸ்-பெங்களூரு-241211-படங்கள்

பெங்களூரைத் தாண்டி வெளியிடத்திற்குச் சுற்றலாம் எனக் காற்றில் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தேன். உறுதுணையாக தம்பி ரசிகன் மகேஷ் சென்னையிலிருந்து வருவதாகவும் சொல்லியிருந்தார். அவர் வேலை புகைப்படம், என் வேலை ஸ்கெட்சிங்...

எட்டு மணிக்குத் திட்டமிட்ட பயணம் தொடங்க பத்துமணி ஆகிவிட்டது.60 கிமீட்டர்கள். வண்டியிலேயே பயணம். அது ஹில்ஸ்டேஷன் எனக் கேள்விப் பட்டிருந்ததால், ஜெர்கினோடு வேறு பயணம். போகும் வழியில் வியர்த்தபோது, ‘சரி இங்கதான் இப்டி, மலையேறியாச்சுன்னா ரொம்ப உபயோகப்படும்’ என சுய சமாதானம் சொல்லியவாறே தொடர்ந்தோம். ஒயிட்ஃபீல்டிலிருந்து, ஹொஸ்கட்டே, தேவனஹல்லி வழியாக நந்திஹில்ஸ் போவதுதான் எங்கள் வழித்திட்டம். ஸ்டேட் ஹைவேஸ், போக்குவரத்து நெருக்கடி, சிக்னல் எதுவும் இல்லாததால் இனிதாகப் பயணித்தோம்.

8 கிமீட்டருக்கு முன்னதாக மலைப்பாதை ஆரம்பம். எனக்கு சும்மாவே ஹைட்டுன்னா பயம். எப்படி வண்டி ஓட்டப் போகிறேனோ என மனசுக்குள் மாரியாத்தாளைக் கும்பிட்டபடி , தக்கிமுக்கி மலையுச்சி சென்று சேர்ந்தோம்.(4000 மீட்டர் கடற் பரப்புக்கு மேலே). போனா சுள்ளுன்னு அடிக்குதுய்யா வெயிலு...அவ்வ்வ்வ்

அப்படியொன்றும் ஈர்ப்பான இடமாய்ப் படவில்லை எனக்கு. வெயில் வேற கொல்லுது, நான் கற்பனை செய்த காட்சிகள் எதுவும் இல்லை. என்ன சுற்றிப்பார்ப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையே வெறுத்துப் போனோம். அப்போது எங்களைக் கடந்த ஒருவரிடம், இந்தப் பக்கம் போகிறீர்களே என்ன இருக்கிறது எனக் கேட்டோம்.அவர் சொன்னபதில் சூழலுக்குத் தக்கது, ‘சூஸைட் பாயிண்ட்’.இதுக்கு இவ்வளவு தூரம் மேல வரணுமா?? வீட்டிலேயே ‘மங்காத்தா’ சீடி, இல்ல சாருவோட ப்ளாக் படிச்சாப் போதாதான்னு தோணுச்சு...

பக்கத்துலயே திப்பு லாட்ஜ் இருந்தது. அவர் சம்மர் ல இங்கு வந்து தங்குவாராம்.யோவ் விண்டர்லயே இங்க வேகுது, சம்மர்ல என்ன கிளுகிளுப்புய்யா இருக்கும் உமக்குனு மனசுக்குள்ள திட்டிட்டு உடனே மன்னிப்பும் கேட்டுக்கிட்டேன். அந்த இடத்துல பெரிய அளவுல ,வாழையிலை போன்ற இலைகள் பார்த்தேன். பெயர் தெரியவில்லை.(படம் கீழே)...

இன்னும் மேலே போனா, நந்தி கோயில் இருக்கு. கால்ல மாவை இழுகிட்டுப் போனா, ஒரு நிமிசத்துல தோசையாப் பிச்சு வாயில போட்டுக்கலாம் போல மொட்டப் பாறைல கொட்டிக் கிடக்குது வெயிலு....சரி கடமையைச் செய்வோம்னு வேலையில இறங்கிட்டேன்...

வாட்டர்கலரில் இருக்கும் பூக்கள் வழியில் பார்த்தவை. பெயர் தெரியவில்லை என ‘நிம்மி’, ‘ஜிம்மி’ எனப் பெயரிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். நண்பர் ஒருவர் அது ‘ஸ்லீப்பிங் ஹைபிஸ்கஸ்’ எனச் சொன்னார். சரி நம்ம சாதிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்...


வாழையிலையை வாட்டர்கலரில் வரைய நினைத்து மொக்கையாகிவிட்டது. ‘pen' புத்தி பின் புத்தி என்பதுபோல பின், பென்னால் சரிசெய்ய முயற்சித்தேன்.


இந்த சிலைகள், நந்தி கோயிலுக்குள் இருக்கும் துணை தெய்வங்கள்...(நல்ல வேளை ஜெயமோகன் கண்ணுல படல. பட்டா, ‘சூடு’ன்னு 5000 பக்கம் நாவல் எழுதிருப்பாரு.)பால்பென்னில் வரைந்தது....

11 comments:

  1. என்னங்க கருத்துரை எழதுறது. அதான் நீங்களே கருத்துரை, பொழிப்புரை, சம்மரி எல்லாம் எழுதீட்டீங்களே!

    ReplyDelete
  2. நந்தி ஹில்ஸில் பார்க்க எனக் குறிப்பாக எதுவும் கிடையாது. இயற்கையை மேலிருந்து ரசித்து வரவேண்டியதுதான்:)!

    ReplyDelete
  3. இன்னும் மேலே போனா, நந்தி கோயில் இருக்கு. கால்ல மாவை இழுகிட்டுப் போனா, ஒரு நிமிசத்துல தோசையாப் பிச்சு வாயில போட்டுக்கலாம் போல மொட்டப் பாறைல கொட்டிக் கிடக்குது வெயிலு....சரி கடமையைச் செய்வோம்னு வேலையில இறங்கிட்டேன்.

    அந்த வெய்யிலை வீணக்காமல் சென்று பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. அந்தபூ செம்பருத்தி இனம்தான்..
    மிளகாய் செம்பருத்தி என சொல்வார்கள்

    ஒற்றை வரிசையில் கோர்த்து சுவாமிக்கு சார்த்தினால் அழகாக இருக்கும்..

    வீடுகளில் அழகுக்காக வளர்ப்பார்கள்..

    ReplyDelete
  5. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அந்த பூவின் பெயர் Gloriosa superba அதன் விதைகள் gout எனப்படும் மூட்டு வலி நிவாரணமாக பயன்படும் colchicine என்னும் மூலப் பொருளை கொண்டுள்ளது. இதைப் பயிரிடவும் செய்கின்றனர்

    உங்கள் வரை திறன் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. எனக்கும் pensil Jammer -ல் சேரவேண்டும் என்ற ஆசை.
    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் .....

    ReplyDelete
  7. @ராமலஷ்மி...

    நன்றி மேடம்...!சரியான டைமிங்குக்குப் போகலை...

    ReplyDelete
  8. @இராஜராஜேஸ்வரி,,,
    நன்றி...
    மிளகாய் செம்பருத்தி...அடடே பேர் நல்லாருக்கே..இது பார்க்க அப்டித்தான் இருந்தது...ஒற்றை வரிசையில் கட்டி சாமிக்குப் படைப்பது(கற்பனை பண்ணிப் பார்த்த்தேன். நன்றாகவே இருக்கிறது)

    ReplyDelete
  9. @கபீரன்பன்...

    மிக்க நன்றி கபீர் சார் உங்கள் வாழ்த்துக்கு...
    எப்பவாவது சண்டே பெங்களுர் வந்தா வாங்க சார்... நல்ல குரூப் அது...!

    ReplyDelete