Friday, July 17, 2009

பழைய சரக்கு…

   இன்னும் கொஞ்ச காலத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயலாது. சில,பல சுய காரணங்களின் அணிவகுப்பு இதற்குப் பின்புலம் உள்ளது.
மற்றபடி சரக்கும் தீர்ந்துவிட்டது போல் உணர்வு…
எப்பவோ ட்ராஃப்டல இருந்ததை மானிட்டர் தூசு தட்டி இப்போ பதிவிட்டிருக்கேன். இந்த கவிதை(..?)களெல்லாம் ஹைக்கூன்னு சொன்னா ரவி சார் அடிக்க வந்துடுவாரு… அதனால தலைப்பு எதுவும் கொடுக்கலை. படிங்க புரியும்.. புரியலைன்னா விட்டுருங்க… இன்னும் சுகம்….மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் உத்தரவு வாங்கிக்கிறேன்….
*****
காற்றில்லாப் பொழுது
இலையை அசைத்தது
நிழல்...
******
மின்தடை நேரம்
புத்தகம் வாசிக்கும்
இருள்...
******

பென்சில் துருவலில்
விரிந்தது ஓவியம்
மரத்தூள்...
******
யானை புலி சிங்கம்
ஒருசேர அழிந்தது
வெள்ளையடிக்கையில்...
******

14 comments:

  1. அப்படியா? சரி, நல்ல படைப்போடு வாங்கள் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. ஹைகூக்கு தலைப்பு தேவையில்லை.
    அப்படித்தான் நான் படித்திருக்கிறேன்.

    ஜப்பானிய ஹைகூ எதற்கும் தலைப்புக் கிடையாது.தலைப்பு கோனார் நோட்ஸ் மாதிரி.

    ஆனால் நவீன ஹைகூ எங்கோ போய்விட்டது.



    1 & 5 சூப்பர்.4 நன்று.

    ஹைகூவில் பிரச்சாரம் செய்தால் மயிலிறகை வைத்து தெருவைப் பெருக்குவது மாதிரி ஒரு பீலிங்.

    ReplyDelete
  3. ////மேல்சாதி உணவையே
    இவனும் உண்டான்
    மலமாக.... ///

    இப்படி மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும்!

    மேல்சாதி உணவையே
    இவனும் உண்டான்
    எச்சில் இலை மிச்சமாக!

    (எந்த மனிதனும் அதை உண்ணமாட்டான்)

    ReplyDelete
  4. என்ன தல..திடிரென்னு...ரைட்டு நல்லப்படியாக முடிச்சுட்டு வாங்க தல

    அனைத்து கவிதை (அ) ஹைக்கூ எல்லாமே கலக்கல் ;)

    ReplyDelete
  5. அண்ணா,திரும்பவும் புறப்பட்டாச்சா !!!
    சீக்கிரமா திரும்பவும் வாங்க.
    பாத்திட்டு இருப்போம்.

    ஹைக்கூக் கவிதைகள் எல்லாம் நல்லாவே இருக்கு.

    நிறையப் படங்கள் கீறிக்கொண்டு வாங்கோ.சுகமா இருங்கோ.

    ReplyDelete
  6. இறுதி கவிதையை ரசிக்கமுடிந்தது. பிற ப்ச்.!

    சீக்கிரம் திரும்பி வாங்க.. அதெப்படி தப்பிச்சு போக விட்டுருவோமா?

    ReplyDelete
  7. கவிதைகள் அனைத்தும் நன்று

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. ennanga posukunnu kaanama poiteenga?? sari...sari....seekirame thirunbi vaanga...

    ReplyDelete
  9. மண்குதிரை,ரவிஷங்கர் சார்,சுப்பையா சார்(அதை நீக்கி விட்டேன் சார்.),கோபிநாத்,ஆதிமூல கிருஷ்ணன்(அப்பாடா ஒண்ணாவது பிடிச்சிருந்ததே..),ஹேமா,சேரல்,கயல்விழி நடனம்,கடையம் ஆனந்த் அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  10. //மின்தடை நேரம் புத்தகம் வாசிக்கும்இருள்

    எனக்கு இதான் ரொம்ப பிடிச்சது. இதில் ஒரு பெரிய கவிதை ஒளிஞ்சிட்டு இருக்காப்ல ஒரு ஃபீலிங். தேடிப்பாருங்களேன். :)

    சீக்கிரம் திரும்பவும். நான் அதுவரை பழைய பதிவுகள் படிக்கிறேன். :)

    ReplyDelete
  11. நன்றி கார்த்திக் முதல் வருகைக்கு...

    ReplyDelete
  12. எல்லாமே,நல்லா இருக்குங்க.உங்கள் தன்னடக்கம்தான் என்னவோபோல் இருக்கு.சரி..கவிதை ஆடுகிறதுதானே...

    ReplyDelete
  13. நன்றி ராஜாராமன். தன்னடக்கமில்லை.. கொஞ்சம் சந்தேகத்தோடுதான் பதிவிட்டேன்.. நான் சொல்வதை விட நீங்களே சொன்னால் நல்லதல்லவா..?!

    ReplyDelete