அனைவருக்கும் வணக்கம். பதிவு போட்டு நெடு நாட்களாகி விட்ட படியால், யாரும் என்னை மறந்து விடாமலிருக்க ஒரு பதிவு அவ்வளவே...
இது ரமண மகரிஷிகளின் படம். ஆனந்தவிகடனின் தீவிர வாசகனாயிருந்த கால கட்டத்தில் திரு. ஜே.பி என்பவர் வரைந்த கோட்டொவியங்கள் என்னை ஈர்த்தன. இன்னும் கோட்டொவியம் என்பதற்குத் தெளிவான வரையறை என்னிடம் கிடையாதெனினும், எனக்குப் புரிந்த அளவில் சில கோட்டொவியங்களை வரைந்தேன்.இளங்கலை பொறியியல் முடித்து சற்றும் தெளிவில்லாமல் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கையில் , வீட்டில் பணம் கட்டி விட்டார்களே என்று முதுகலைப் பொறியியலுக்கான நுழைவுத் தேர்வான ‘கேட்’ எழுதுவதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குச் சென்றேன்.(அதுதான் அங்கு செல்வது முதல் முறை). அப்பொழுது எல்லாம் ‘கேட்’ தேர்வில் , இப்போதிருப்பது போல் நாலு விரலில் ஒன்றைத்தொட்டு விடையளிக்க முடியாது. அது ‘விரிவான விடை அளிக்கும்’ தேர்வாகும். ஒன்றும் படிக்கவில்லை. ஆனால் தேர்வுக்கட்டணம் வீணாக அரசுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காகவே தேர்வுக்குச் சென்றேன்.
ஓரிரு கோடிட்ட இடங்களைத் தவிர்தது எல்லாமே என் கண்ணைக் காட்டில் விட்டது போலிருந்ததால், நேரம் போவதற்காக, கோட்டொவியம் பழக ஆரம்பித்தேன் தேர்வறையில்(நல்ல வேளை அங்கு எந்த ஃபிகரும் வரவில்லை, ஆண் சூப்பர்வைசர்தான்)என் கவனம் சிதைக்கக் கூடிய அளவில் யாருமில்லை. ஓடு மேய்ந்த உத்திரத்தைப் பார்த்து வினாத்தாளின் கடைசிப் பக்கம் வரைய ஆரம்பித்தேன் . இரண்டரை மணி நேரம் முடிந்ததே தெரியவில்லை.
அப்படி ஆரம்பித்ததுதான் இந்தக் கோட்டொவியப் பழக்கம்.இந்தப் படம் வரைந்த போது ஒரு வேலையை விட்டு நின்றிருந்தேன். அன்று எனக்குப் பிறந்த நாள் வேறு. கையில் காசில்லாச் சூழல். ஆனால் டீக்கடையில் இருக்கும் அக்கவுண்டின் உதவியோடு வயிற்றுக்கும் சிறிது ஈந்து விட்டு(பால் டீயும் ,சமோசாவும்), வரைந்து முடித்த படம்.
இதற்குப் பின் இன்னும் வரலாறுகள் உண்டு. இப்போதைக்கு இது போதும்.
படம் அழகாயிருக்கு
ReplyDelete(பின்னனி ரொம்பவே கஷ்ட்டமாயிருக்கு)
நாண்கு மாதங்கள் ஆயிற்றே
ReplyDeleteதங்கள் பதிவிட்டு
ஹும்ம்ம்
இனி அவசியம் பதிவிடுங்கள் நண்பரே
நன்றி ஜமால் .. நீங்கள் சொன்னது போல் பின்னணி ரொம்பக் கஷ்ட்டமாய்த்தானிருந்தது(ஒரு ‘ட்’ சேர்த்துப் போட்டது நிலைமையைத் தெளிவாகச் சொல்லிவிட்டது).
ReplyDeleteபின்பும், இப்போதும் பரவாயில்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
படமும் கலமும் நல்லா....
ReplyDelete.....?
ReplyDeleteநல்லா இருக்கு.வரைந்த சுழ்நிலை
ReplyDeleteசற்று சோகம்தான்.
ஒரு 10% சதவீதம் ரமணர் ஜாடை பொருந்தி வராமல் இருக்கிறது.வலது கண்? தாடை?கண்களில் கருணை?
வாழ்த்துக்கள்!
வாவ். இந்த திறமையை நீங்க இன்னும் மெருகெற்றி கலக்க வேண்டும் என்பது என் ஆசை.. ப்ளீஸ்...
ReplyDelete//ஆ. ஞானசேகரன்//
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
//தமிழன் கறுப்பி//
என்னங்க வெறும் கேள்விக்குறியோட போயிட்டீங்க...?????
//ரவிஷங்கர்//
வாங்க சார்..அது வலது கண் அல்ல. இடது கண்ணும், சற்று அதற்கு மேற்பட்ட பகுதியும்தான்.
இவ்வோவியத்தைச் சிறு சிறு கோடுகளை இணைட்து வரைந்தேன். பேனாவிலேயே ஆரம்பித்ததால் தவறு தெரிந்தும் திருத்த இயலவில்லை.இதனை அப்போது ஒரு பயிற்சியாக எடுத்துக்கொண்டேன்..
நன்றி சார் வருகைக்கும், கருத்துக்கும்...
வாங்க கார்க்கி...
ReplyDeleteகண்டிப்பா அந்தப் படத்துக்கப்புறம் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டேன்.
இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் இன்னொரு பென்சில் அல்லது பேனா ஓவியம் புதிதாக வரையலாமென்றிருக்கிறேன்..
நன்றி சகா....
பார்த்தேன்! ரசித்தேன்! பரவசமானேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பார்த்தேன்! ரசித்தேன்! பரவசமானேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நடன சபாபதி சார்...
ReplyDeleteஆஹா.... ஓவியரா நீங்க!!! ரொம்ப சந்தோஷம்!!!
ReplyDeleteஎனக்குப் பிடித்த கலைகள் இரண்டு... ஓவியம், மற்றூம் கவிதை!! என் அப்பா ஒரு ப்ரொஃபஷனல் ஓவியர். கிருஷ்ணா ஓவியங்களை வெகு பிரசித்தியாக வரைவார்...
கோட்டோவியம் என்பது கோடுகளால் வரைவதுதான்.. ஒரே ஒரு வர்ணம்.. அது எதுவாக இருந்தாலும் கவலையில்லை!! நீங்கள் கோட்டோவியங்களை வேறுவிதத்தில் க்யூபிசம், மார்டனிசம் முறையில் வரையுங்கள்!!! ஒரு வித்தியாசம் கிடைக்கும்!!! போர்ட்ரைடுகள் உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டாது!! - இது என் கருத்து மட்டுமே!!
வாங்க ஆதவன் சார். உங்க அப்பா ப்ரொஃபஷனொல் ஓவியரா...!!அப்போ உங்ககிட்ட நிறைய ட்வுட் கேட்டுக்கலாம்.
ReplyDeleteகோட்டொவியம் பற்றி எனக்குத் தெளிய வைத்ததற்கு நன்றி. ‘க்யூபிசம், மாடர்னிசம்’ இதெல்லாம் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள நிச்சயம் முயற்சிக்கிறேன். ‘போர்ட்ரைட்’கள் என்னை வித்தியாசப் படுத்திக்காட்டாது என்பது சரிதான்.இப்பொதைக்கு அதுதான் ஓரளவு எளிதாக வருகிறது. மற்றவற்றையும் முயற்சிக்க ஆசைதான். கண்டிப்பாக முயற்சிப்பேன் உங்களைப் போன்றவர்களின் ஆதரவுடன்...
தேர்ந்த ஓவியம்.! வாழ்த்துகள்.!
ReplyDeleteமுதல் வருகைக்கும்(பெயர் மாற்றத்திற்குப்பின்), வாழ்த்துக்கும் நன்றி ஆதிமூல கிருஷ்ணன் சார்(பெயரை தட்டச்சுவதற்குள் கண்ணைக்கட்டிவிடுகிறது...:-))
ReplyDeleteசூப்பர்... இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்(எக்ஸாம் டைமை இவ்வளவு யூஸ்ஃபுல்லாவா...)ஸ்ட்ரோக் ஆர்ட்டுகென்று நிறைய பென்சில் வகைகள் உள்ளது(அதில் வரைந்தால் அழகாக வரும் தற்பொழுது அதைதான் வரைந்துகொன்டிருக்கிறேன்)
ReplyDelete2H,HB,2B,4B,6B,8B,5H,6H will u try these kinds of pencils.
4 ஆம் தேதியே போட்டுவிட்டிர்களா... இப்பொழுதுதான் பார்த்தேன்.
//(நல்ல வேளை அங்கு எந்த ஃபிகரும் வரவில்லை, ஆண் சூப்பர்வைசர்தான்)//
இல்லைனா ரமணர்க்கு பதில் அவங்கள வரைந்த்திருப்பீர்கள்.
வாங்க தர்ஷினி...நன்றி...
ReplyDelete//ஆர்ட்டுகென்று நிறைய பென்சில் வகைகள் உள்ளது//
பின்னர் தெரிந்து கொண்டேன். அப்படி வரைந்ததுதான் பாவனா ஓவியம்.ஆனால் பொறுமையில்லாத காரணத்தால் உடனடி சாய்ஸ் ‘ப்ளாக் பால் பாய்ண்ட் பேனா’தான்.
//
இல்லைனா ரமணர்க்கு பதில் அவங்கள வரைந்த்திருப்பீர்கள்//
நல்ல யோசனைதான். இதுவரை நான் சென்ற தேர்வுகளில் அவர்கள் வந்த போது , தேர்வை ஒழுங்காக எழுதிவிட்டேன். தெரியாமல் முழிக்கும் தேர்வுகளில் அவர்கள் வரவில்லை. வந்திருந்தால் அப்படிக்கூட நடந்திருக்கலாம்...
தமிழ்ப்பறவை அண்ணா பிந்தியே வந்திருக்கிறேன்.பரவாயில்லை.படம் அழகாயிருக்கு.இப்பிடியெல்லாம் எப்பிடிக் கீறுறீங்கன்னு மட்டும்தான் கேக்கிற அளவுக்கு என் சித்திர அறிவு.
ReplyDeleteகோட்டோவியம்ன்னா என்ன?கோவிக்காம பதில் தாங்க.
உண்மைக்கும் தெரில.கீறத் தெரிஞ்சவங்க எல்லாம் சேர்ந்துகிட்டு அடிக்க வராதிங்கப்பா.எனக்குத் தெரில.அதான்.
ஓவியம் அருமை.ஒவ்வொரு கோடுகளிலும் உணர்வோடு உங்கள் உணர்வு.முகத்தில் பாவம்-அன்பு-அமைதின்னு நிறைய இருக்கு.
தலைமுடிகூட வயதின் வெளுப்பு...!
அடிக்கடி பதிவுகள் இனி வரும்தானே?வந்திட்டீங்க சந்தோஷம்..
வாங்க ஹேமா...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி...
இனி அவ்வப்போது வருவேன்...
நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கே இரு தினங்களுக்கு முன்புதான் பதில் தெரிந்தது.
//கோட்டோவியம் என்பது கோடுகளால் வரைவதுதான்.. ஒரே ஒரு வர்ணம்.. அது எதுவாக இருந்தாலும் கவலையில்லை!!//(நன்றி:ஆதவா)..
இப்பதிவின் பின்னூட்டங்களில் ஆதவா அவர்களின் பதிலில் அறிந்து கொள்ளலாம்..
அருமை!
ReplyDeleteஉயிரோட்டமாக இருக்கிறது.
பாராட்டுகள்.
வாங்க யோகன் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...
ReplyDeleteபிரமாதம் போங்கள், மிகவும் அருமை... அனால் ஓன்று, விரிவாக எழுதுவது தான் மிக சுலபம் ( உண்மை தமிழனை ) கேளுங்கள் ... நாலில் ஒற்றை டிக் செய்வதற்கு, ஆழ்ந்த அறிவு வேண்டும் , நாலுமே சரியான பதில் போல் தோன்றும் , அதில் மிக சரியான பதிலை தேர்ந்தெடுக்க வேண்டும் ...
ReplyDeleteஅதை விடுங்கள் , உங்கள் ஓவியம் சூப்பர், பதிவும் , ஓவியமும் அடிக்கடி இடுங்கள்
nice to see ur blog & drawings/paintings, barani ! how is ur life ! i opened a new site for automobile service engineers (as i am) in the name of www.hcvservice.com and i moved my posts to http://we.hcvservice.com
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சுந்தரராமன் சார்.
ReplyDelete//அனால் ஓன்று, விரிவாக எழுதுவது தான் மிக சுலபம் ( உண்மை தமிழனை ) கேளுங்கள்//
தியரின்னா எம்புட்டு வேண்ணாலும் எழுதிடுவேன். இது முழுக்க முழுக்க ப்ராப்ளம் ஓரியண்டட் தேர்வு.
கொடுத்திருந்த எந்த்க் கணக்குக்கும் சூத்திரம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த சூத்திரங்களுக்கேற்ற எண்கள் கணக்கில் இல்லை. என்ன செய்ய...?
தனா(அனுப்பானடி பையன்) எப்படி இருக்கீங்க... நான் நல்லா இருக்கேன். மற்ற நண்பர்களும் நலம்.
ReplyDeleteரொம்ப நாளா நினைச்சேன் உங்க பக்கம் வரணும்ன்னு.. நேற்றுதான் முடிஞ்சது.’மதுரைக்காரைங்க’ பக்கம் பார்த்தேன். படங்கள் அசத்தல் . இன்னும் படிக்கலை. படிச்சுட்டு சொல்றேன்.என் புகைப் படத்துக்குக் கீழ என்னோட பெர்சனல் ஐ.டி. இருக்கு. அதுக்கு மெயில் பண்ணுங்க தனா..
மிகவும் நல்ல முயற்சி.
ReplyDelete//பேனாவிலேயே ஆரம்பித்ததால் தவறு தெரிந்தும் திருத்த இயலவில்லை.இதனை அப்போது ஒரு பயிற்சியாக எடுத்துக்கொண்டேன்.. //
சரியான அணுகுமுறை.
இன்று ரமணர் மகாசமாதி அடைந்த தினம். அவரை நினைவு கூர வைத்ததற்கு நன்றி
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்பு தமிழ்ப்பறவை...
ReplyDeleteநல்லா இருக்கு பாஸ். ஓவியம் பற்றி கருத்து சொல்ற அளவுக்கு நமக்கு சரக்கு பத்தாது. ஸோ, இந்த க்யூபிஸம், மாடர்னிஸம் இதெல்லாம் பத்தி ஒரு க்ளாஸ் எடுத்தா மதி..! :)
படம் உயிரோட்டமாக இருக்கிறது.
ReplyDeleteசூப்பரா இருக்குங்க படம் !!!
ReplyDeleteபதிவு நெகிழ்ச்சியா இருந்துச்சுப்பா!
அன்புடன் அருணா
வாங்க கபீரன்பன் சார்.. ரமணர் மகாசமாதியான தினம் பற்றித் தெரியவில்லை. தங்களின் ரமணர் ஓவியம் பார்த்த பின் தான் இவ்வோவியம் பதிவிட எண்ணம் வந்தது.
ReplyDeleteதங்களுக்கும் , தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
பேனாவில வரையறது சரியான அணுகுமுறை என்பதை விட எளிதான அணுகுமுறை... நினைச்சவுடன் கிறுக்கலாம்..
வாங்க வசந்த்... //ஓவியம் பற்றி கருத்து சொல்ற அளவுக்கு நமக்கு சரக்கு பத்தாது.//
ReplyDeleteகவிஞருக்குச் சரக்கு பத்தலையா..? தன்னடக்கம் அதிகம்ங்க...
க்யூபிசம், மாடர்னிசம் பற்றிப் பின்னால் பார்க்கலாம் வசந்த்..
வாங்க கடையம் ஆனந்த்.. வாழ்த்துக்கு நன்றி...
ReplyDeleteஅருணா மேடம், நீண்ட நாள் கழிச்சு வந்து வாழ்த்தீருக்கீங்க... நன்றிகள் மேடம்..
ReplyDeleteவாவ், இப்படி ஒரு திறமையா! எனக்கு ஓவியம் பற்றி, குறிப்பாகக் கோட்டோவியம் பற்றி ஒன்றும் தெரியாது. ரமணர் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. இதில் இன்னும் அதிக கவனம் செலுத்துங்களேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஅனுஜன்யா
நன்றி அனுஜன்யா வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும்...
ReplyDeleteஉங்கள் பிறந்த நாளில்தான் ரமணரும் பிறந்திருக்கிறார்....கோட்டோவியமாக!
ReplyDeleteடீக்கடை அக்கவுண்ட்கள் வாழ்க.. இது தொட்டு என்னுள் விரிகிறது பட்டினியில் கழிந்த பொழுதுகள்!
ஜெகநாதனின் முதல் காலடியில் என்னுள்ளும் விரவிக் கிளைக்கின்றன சந்தோச வேர்கள்...
ReplyDeleteவருகைக்கு நன்றி...
உங்கள் ஓவியங்களைப் பதிவிடலாமே... பதிவுப்பக்கம் வந்தாலே பின் நவீனத்துவ எழுத்துக்கள் சுற்றிச் சுற்றி அடிக்கின்றன...
ஜெகநாதனின் முதல் காலடியில் என்னுள்ளும் விரவிக் கிளைக்கின்றன சந்தோச வேர்கள்...
ReplyDeleteவருகைக்கு நன்றி...
உங்கள் ஓவியங்களைப் பதிவிடலாமே... பதிவுப்பக்கம் வந்தாலே பின் நவீனத்துவ எழுத்துக்கள் சுற்றிச் சுற்றி அடிக்கின்றன...
நீங்கள் என் ரமணரின் ஓவியத்தின் பின்னூட்டமாக இந்த சுட்டியை போடிருந்தீர்கள். மிக அருமையான ஓவியம், கோடுகள் நேர்த்தியாக அமைந்துள்ளது. இந்த பாணியில் இன்னும் நிறைய வரையுங்கள்.
ReplyDeleteஅன்புடன்,
மீனாட்சி சுந்தரம்
நன்றாக இருக்கு பாராட்டுகள்
ReplyDelete//ஓடு மேய்ந்த உத்திரத்தைப் பார்த்து வினாத்தாளின் கடைசிப் பக்கம் வரைய ஆரம்பித்தேன் . இரண்டரை மணி நேரம் முடிந்ததே தெரியவில்லை.//
ReplyDeleteஆரம்பிச்ச இடம் “நல்ல இடம்” ( நான் வேலை பார்த்த கல்லூரி) ..அதான் இம்புட்டு நல்லா வரையிறீங்க ..