Thursday, May 14, 2009

பயபக்தி

ஆடு வெட்டி
இரத்தம் பிடித்து
அபிஷேகித்த அய்யனார்,
அரிவாள் தெய்வங்களை
வணங்கச் சொன்ன
என்னைப் பயத்துடன்
ஏறிட்டாள்
செல்ல மகள்...

46 comments:

  1. அன்பு தமிழ்ப்பறவை...

    கவிதையும், ஓவியமும் அட்டகாசம்...! கலக்கலாக இருக்கின்றன...!!! தொடருங்கள்.

    ReplyDelete
  2. கவிதையும், படமும் அருமை அண்ணா!

    ReplyDelete
  3. @ஆனந்த்...
    வாங்க ஆனந்த்... ரொம்ப நாளுக்கப்புறம் வந்து வாழ்த்தி இருக்கீங்க. நன்றி...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    ReplyDelete
  4. இது மேட்டரு.! கவிதையும், படமும் தேர்ந்த படைப்புகள்.!

    ReplyDelete
  5. நண்பா நான் எப்போதும் உங்களுடனே...நட்புக்கு இடைவெளி உண்டோ...

    ReplyDelete
  6. @ஆதிமூல கிருஷ்ணன்...
    நன்றி ஆதி சார்....அப்பாடா... ஒரு வழியா கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்க... அப்ப அடுத்தும் கவிதைதான்...

    @ஆனந்த்..
    நன்றி நண்பா...

    ReplyDelete
  7. அருமை !

    டெரரர் கவிதை :))

    (அரிவாள் சாமின்னா எனக்கும் கொஞ்சம் பயம்தான்)

    ReplyDelete
  8. //தமிழ்ப்பறவை கூறியது...
    @ஆதிமூல கிருஷ்ணன்...
    நன்றி ஆதி சார்....அப்பாடா... ஒரு வழியா கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்க... அப்ப அடுத்தும் கவிதைதான்...
    //

    கண்டினியூவா டெரரர் கூடாது !:))

    ReplyDelete
  9. கவிதையில டெரரர் கூடாது

    ஒ.கேய்

    கண்ட்னியூ!

    கண்டினியூ!! :)

    ReplyDelete
  10. நன்றி ஆயில்யன்..
    //கண்டினியூவா டெரரர் கூடாது !:))//
    ஐயயோ...அடுத்து கவிதை கூடாதா...? :-(

    //கவிதையில டெரரர் கூடாது //
    இது டீல்... இந்த டீல் எனக்குப் பிடிச்சிருக்கு...
    அடுத்த கொலைவெறிக் கவிதையில் ‘கொலைவெறி’ கம்மியாகத்தான் இருக்கும் ஆயில்யன் அண்ணா...
    (எல்லாரையுமே அண்ணான்னு சொல்லிட்டா எப்பவுமே நாம யூத்துதான்)

    ReplyDelete
  11. படம் அருமை.
    அய்யனார் பவ்யமா இருக்காரு. இன்னும் கொஞ்சம் பயம் உண்டாக்கிற மாதிரி வரைந்திருக்கலாம்.
    அப்புறம் சொல்லவே இல்ல உனக்கு கல்யாணமான விஷயத்தை..

    கவிதைய கொஞ்சம் மாத்தலாம் [:)]

    ஆடு வெட்டி
    இரத்தம் பிடித்து
    அபிஷேகித்த அய்யனார்,
    அரிவாள் தெய்வங்களை
    வணங்கச் சொன்ன
    அப்பாவை பயத்துடன்
    ஏறிட்டாள்
    அன்பு மகள்...

    ReplyDelete
  12. @பெயரில்லா, கோசி....
    அன்பு கோசிக்கு....
    நான் நினைத்ததைச் சொல்லிவிட்டாய்...
    அய்யனாரின் கண்களில் இன்னும் கொஞ்சம் கொடூரம் காட்டி இருக்க வேண்டும்.ஏற்கனவே ஆயில்யன் சார் டெர்ரரா ஃபீல் பண்ணுறாரு..(என்னடா யாரும் கவனிக்கலையேன்னு நினைச்சேன்)...
    //அப்புறம் சொல்லவே இல்ல உனக்கு கல்யாணமான விஷயத்தை..//
    ஏம்ப்பா பொண்ணு பார்க்குற நேரத்துல இப்படில்லாம் பிட்டப் போடுறீங்க...அது கவிதை...
    //ஏறிட்டாள்
    அன்பு மகள்...//
    அடடே நல்லாருக்கே...’அ’வுக்கு ‘அ’வா...?
    ஆனால் அன்பு என்பதை விட ‘செல்ல’ என்பதில் அப்பாவுக்கு அவள் மேலும், அவளுக்கு அப்பா மேலும் உள்ள நெருக்கம் 50 மைக்ரான் குறைவாக இருப்பதை உணர்ந்ததால் ‘செல்ல மகள்’ இடம் பிடித்து விட்டாள்...

    ReplyDelete
  13. படம் கச்சிதம்..

    கவிதையும்..

    இருந்தாலும் படம்தான் என் ஃபேவரிட்..

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரு குத்தமும் சொல்ல முடியாது. நிறைய எழுதுங்கள். நிறைய படிக்கவும் செய்யுங்கள்.

    ஓவியம் - வாவ், அட்டகாசம் பரணி. என்னோட கவிதைகளுக்கு (!) ஓவியம் உங்க கிட்ட தான் வரணும்னு நினைக்கிறேன் :)))

    அனுஜன்யா

    ReplyDelete
  15. யதார்த்தமான கவிதை!

    ReplyDelete
  16. தமிழ் பறவை,

    படம் பீலிங்க இருக்கு.கவிதையும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  17. /ஓவியம் - வாவ், அட்டகாசம் பரணி. என்னோட கவிதைகளுக்கு (!) ஓவியம் உங்க கிட்ட தான் வரணும்னு நினைக்கிறேன் :))) //

    மனச தளர விடாதீங்க சகா.. பொது வாழ்க்கைல இப்படி பல இடஞ்சல்கள் வரத்தான் செய்யும்.. இவர எல்லாம் பொல்லாதவன் கிஷோர் மாதிரி அப்படியே போக விட்டடுனும்.. சீரியச எடுத்துக்க கூடாது..

    பி.பி.கு: இது தமிழ்ப்பறவைக்கு. அனுஜன்யாவுக்கு அல்ல..

    (பி.பி.கு என்றால் பின்னூட்டத்திற்கு பின்குறிப்பு)

    ReplyDelete
  18. @ கார்க்கி...
    நன்றி சகா... வருகைக்கும், கருத்திற்கும்...
    அனுஜன்யா சார் மேல என்ன கோபம் உங்களுக்கு... அவரும் உங்களை மாதிரி ரொம்ம்ம்ப நல்லவர்தான்...


    @அனுஜன்யா...

    மறுபடியும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி சார்.அப்போ இதில தப்பில்லைன்னுட்டீங்க..படிச்சிட்டுத்தான் இருக்கேன். இன்னும் தீவிரப் படுத்துறேன் சார்...

    //என்னோட கவிதைகளுக்கு (!) ஓவியம் உங்க கிட்ட தான் வரணும்னு நினைக்கிறேன் :)))//
    உங்களுக்கில்லாததா சார்.. ஆனா நீங்க கவிதை போடுற வேகத்துல என்னால படம் தர முடியாது. இருந்தும் முயற்சிக்கிறேன் சார்.

    ReplyDelete
  19. @வால்பையன்...
    வாங்க வால் பையன் ஒரு வருடத்துக்கு அப்புறம் என் பதிவுக்கு வந்து வாழ்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே....


    @ரவிஷங்கர் சார்..
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரவி சார்..
    என்ன சார் படம் ஃபீலிங்கா இருக்குன்னிட்டிங்க...ஓ.கே.. நல்லா இருந்தா சரிதான்...

    ReplyDelete
  20. //வாங்க வால் பையன் ஒரு வருடத்துக்கு அப்புறம் என் பதிவுக்கு வந்து வாழ்த்தியிருக்கீங்க நன்றி நண்பரே....//

    மன்னிக்கனும் என் வீட்டு பக்கமும் உங்களை காணோமா அதான் தெரியல!

    ReplyDelete
  21. //மன்னிக்கனும் என் வீட்டு பக்கமும் உங்களை காணோமா அதான் தெரியல!//
    வந்து கொண்டிருக்கிறேன்.. மவுனமாக படித்து விட்டு நழுவி விடுவேன் கல்யாணப் பந்தியிலிருந்து வெளியேறுவது போல...நிங்கதான் சூப்பர்ஸ்டாராச்சே...

    ReplyDelete
  22. நல்ல கவிதை, சென்ற பதிவிலிருக்கும் கவிதையும் மிகப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  23. இந்த கவிதையை எப்படி தவறவிட்டேனென்று தெரியவில்லை..

    எதிரே நிற்பது அன்பு தெய்வமல்ல, ஒரு அச்சமூட்டை என்று மகளுக்குத் தெரிந்திருக்கிறதோ என்னவோ..

    அய்யனார் ஒரு காவல் தெய்வம் மட்டுமல்ல, காதல் தெய்வமும்தான்.... அங்கதாங்க காதலர்களின் சந்திப்பும் நடக்குது!!

    ReplyDelete
  24. @யாத்ரா...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி யாத்ரா...முந்தைய பதிவுக் கவிதையைப் பாராட்டி இருந்தீர்கள்.. அதன் அனுபவம் உங்கள் கவிதையில் அழகாக இருந்தது...அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லிப் போங்கள்...


    @ஆதவா..

    வாங்க ஆதவா..நீங்க அய்யனாரை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறீர்கள் அதுவும் சரிதான்..நன்றி ஆதவா...

    ReplyDelete
  25. வித்தியாசமான கவிதை

    அருமை

    ஓவியம் அழகு

    ReplyDelete
  26. ரசித்தமைக்கு நன்றி சக்தி...

    ReplyDelete
  27. கொஞ்சம் மாத்தி எழுதி நேற்று இருந்து
    நல்லா வாங்கி கட்டிட்டு இருக்கேன்
    இப்படிதான் எழுதுவேன்னு இருக்கிற உங்க நம்பிக்கையை பாராட்டறேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அப்படித்தான் ஊர் சொல்லும் அதுக்காக நாம கவிதை(..?) எழுதாம விட்டுட்டோம்னா தமிழை யார் காப்பாத்துறது?
    அதனாலதான் நான் என்னோட கொலைவெறிக்கவிதை முயற்சியைத் தொடர்ந்துகிட்டே இருக்கேன். இன்னும் நாலைந்து கவிதை வெடிகுண்டுகள் இருக்கு. ஓவியத்தோட போடணும்கிறதுக்காக கொஞ்சம் லேட்டாகுது. இதுக்காக ஒதுங்கிட்டேன்னு யாரும் நினைச்சுடக்கூடாது..
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி

    ReplyDelete
  29. அப்படித்தான் ஊர் சொல்லும் அதுக்காக நாம கவிதை(..?) எழுதாம விட்டுட்டோம்னா தமிழை யார் காப்பாத்துறது?

    நான் எழுதறது கவிதை தானாங்கிறது தான் சந்தேகமே...

    ReplyDelete
  30. @கயல்விழி நடனம்....
    வருகை மற்றும் வாழ்த்துக்கு நன்றி...
    // :) // இது குழப்பமில்லாத புன்னகைன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  31. பயமான பக்தி

    அருமை ஓவியமும்

    வரிகளும்

    ReplyDelete
  32. நன்றி நட்புடன் ஜமால்...

    ReplyDelete
  33. பரணி,
    அன்பு மகளுக்கும் செல்ல மகளுக்கும் ஒரு வித்தியசம் உண்டுன்னு நினைக்கிறேன். அப்பா தன மகளை ‘செல்ல மகள்’ என்று அழைக்கலாம். ஆனால் மகள் தனது அப்பாவை 'செல்ல அப்பா' என்று அழைக்கலாமா? இது ஒரு கேள்வியே..நீ சொன்னது மாதிரி செல்ல மகள் தான் கவிதைக்கு நல்ல இருக்கு.

    ஒரு கேள்வி : இதுக்கு பேருதான் "god fearing-a"??.
    அடுத்த கொலை வெறி கவிதை ரெடியா?

    BTW, how to type in tamil?. I'm typing it in orkut and pasting it here.

    ReplyDelete
  34. கோசி இப்போதான் தோணுச்சா...?
    ஒத்துக்கிட்டா சரிதான்.
    //அடுத்த கொலை வெறி கவிதை ரெடியா?//
    ரெடியாயிடுச்சு... பதிவிடத் தோணவில்லை. விரைவில்...
    தமிழில் தட்டச்ச,
    http://software.nhm.in/writer.html
    இங்கு போய் மென்பொருளைத் தரவிறக்கிக் கொண்டால் எளிதில் தமிழில் தட்டச்சலாம்.

    ReplyDelete
  35. நல்லவேளை எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தேன்..
    இன்றேல் வெறும் கவிதையை மட்டும் பாராட்டிவிட்டுப் போயிருப்பேன் :)
    அய்யனார் அருமைங்க..
    (எனக்கு kosi's திருத்தம் பிடித்திருக்கிறது!! )

    ReplyDelete
  36. வாங்க மயாதி... முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  37. அருமையான
    கவிதை "சுருக்" நறுக்"

    ReplyDelete
  38. @நேசமித்திரன்...

    வாங்க கவிஞரே... முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    @கௌரி...
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  39. இது ரொம்ப நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  40. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராஜாராம்...

    ReplyDelete