Monday, July 14, 2008

எவனோ ஒருவன்....!?

சரியான வேலை அல்லது வேலை அற்றிருந்த தருணங்களில் எனக்கு பகல் பொழுது கொடுமையாகக் கழியும்.(வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நத்தையை(ஆமை..?) விட மெதுவாக நகரும் ...நன்றி எஸ்.ராதாகிருஷ்ணன்) .இரவோ இன்னும் கொடுமை..



அப்படியான சமயங்களில் எனக்கு ஒரே பொழுதுபோக்கு பென்னால் படம் வரைவதாகும்.. பென்சிலில் வரைந்தால் அழித்து வரைய சோம்பல்தனம். .


ஒரு தருணத்தில் ஒரு வாரப்பத்திரிக்கையில் இப்படத்தைக் கண்டேன். எளிய , ஆனால் அழகிய சிரிப்புடன் கவர்ந்திழுத்தது.கவனத்துடன் (பிழை ஏற்பட்டால் காகிதம் கிழிபடும்..)பால் பாயின்ட் பென்னால் வரைந்து முடித்தேன்..வெகு நாட்கள் ஆகி விட்டதால் பேப்பர் சிதைவுற்று விட்டதால் சரியாக பதிவேற்ற முடியவில்லை..நிறை ,குறைகளை எதிர்பார்க்கிறேன்..

19 comments:

  1. நல்லா இருக்கு.

    நீங்க நல்ல ஓவியர் தான்.

    ReplyDelete
  2. உண்மையில் பிரமாதம்

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை அண்ணா ஓவியம் அழகாக அமைந்திருக்கிறது.கண் மிக ஒளியோடு தெரிகிறது.
    ஒப்புக்கொள்கிறேன் உண்மையில் நீங்கள்தான் கீறியிருந்தால் அருமை.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.அதுசரி...யார் இவர்?

    ReplyDelete
  4. //நீங்க நல்ல ஓவியர் தான்.//
    ந‌ன்றி க‌ய‌ல்...'நல்ல‌' என்ப‌து கொஞ்ச‌ம் ஓவ‌ர்..


    //உண்மையில் பிரமாதம்//

    த‌ங்க‌ளின் முதல் வ‌ருகைக்கும்,க‌ருத்துக்கும் ந‌ன்றி ச‌த்தியா..

    //உண்மையில் நீங்கள்தான் கீறியிருந்தால் அருமை.//

    பின்ன‌ யாரோ ம‌ண்ட‌ப‌த்துல‌ கீறுன‌தையா நான் என்ன‌துன்னு சொல்றேன்..

    //அதுசரி...யார் இவர்?//

    ச‌கோத‌ரி க‌டைசில‌ சாச்சுட்டியே...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு

    ReplyDelete
  6. ஆஹா

    உங்களுக்குள் இத்தனை திறமை இருக்கா. உண்மையில் கலக்கல்.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்த்..


    கானாபிரபா அண்ணாச்சி வெகுநாள் கழித்து வந்தாலும் வெகுமதியாய் விமர்சித்ததற்கு நன்றி....

    ReplyDelete
  8. அன்பு தமிழ்ப்பறவை...
    ஆமா,, இது மேடி தானே.. நைஸ்...

    தங்கள் விருப்பத்திற்கேற்ப பாப்லோ நெரூடாவின் ஒரு கவிதையை எனக்குப் புரிந்த அளவு தமிழில் மாற்றி இருக்கிறேன்.

    http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_16.html

    நன்றி.

    ReplyDelete
  9. thanks vasanth.. i will go through that page and will send comments....

    ReplyDelete
  10. வாவ்... அசத்தறீங்க போங்க.

    ReplyDelete
  11. நன்றி சேவியர் வருகைக்கும், வாழ்த்துக்கும்....

    ReplyDelete
  12. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சிவா...

    ReplyDelete
  13. படம் நல்லா வந்திருக்கு...
    சும்மா இருக்கிற நேரம் மட்டுமென்றில்லாம இந்த திறமையை இன்னும் மெருகேற்றுங்க...

    ReplyDelete
  14. உஙகள் ஊக்குவிப்புக்கு நன்றி தமிழன்...வேலையும்,வலையும் தொடாத வேளைகளில் வண்ணப் பென்சில்கள் தொடுகிறேன்..விரைவில் இதைவிட நல்ல ஓவியங்களை வலையேற்றுகிறேன்...ஷொட்டுக்கும்,குட்டுக்கும் தலைவணங்கி...

    ReplyDelete
  15. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜய்பாலாஜி...

    ReplyDelete
  16. he looks like cine actor Madhavan isn't it..

    ReplyDelete
  17. என்ன தல இப்பிடி கேட்டுட்டீங்க... எனக்கே இப்பொ என் படத்து மேல சந்தேகம் வந்துடுச்சு...அது மாதவன் தான் .. வருகைக்கு நன்றி ராமன்...

    ReplyDelete